திட்டமிடுதல் மட்டும் முக்கியமல்ல. அதை நிறைவேற்றுவதற்கு கடினமாக உழைக்க வேண்டும் என்பதை உணர்ந்தவர்கள் நீங்கள்தான். உங்களின் பூர்வ புண்ணியாதிபதியான சுக்கிரன் பிப்ரவரி 22ந் தேதி முதல் 9ம் வீட்டில் அமர்வதால் வரவேண்டிய பணம் கைக்கு வரும். வீடு கட்ட, வாங்க, வங் கிக் கடன் கிடைக்கும். குழந்தை பாக்யம் உண்டு. பிள்ளைகள் கல்வியில் மட்டுமல்லாமல் கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசு மற்றும் பாராட்டுக்களை பெறுவார்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள்.
பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். பிதுர்காரகன் சூரியன் இப்போது 9ம் வீடான பிதுர் ஸ்தானத்திலேயே அமர்வதால் தந்தையாருக்கு லேசாக உடல்நிலை பாதிக்கும். அவருடன் மனவருத்தங்களும் வரக்கூடும். செவ்வாயும் 9ம் வீட்டில் தொடர்வதால் கொஞ்சம் சேமிப்புகள் கரையும். கைமாற்றாகவும் பணம் வாங்க வேண்டியது வரும். ஆனால், மார்ச் 2ந் தேதி முதல் செவ்வாய் 10ல் நுழைவதால் தந்தையாருடன் இருந்த மனத்தாங்கல் குறையக்கூடும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உங்கள் ராசிநாதனான புதன் 1ந் தேதி வரை பலவீனமாக இருப்பதால் சளித் தொந்தரவு, தொண்டைப் புகைச்சல், சரியான தூக்கமின்மையால் கண் எரிச்சல் வர வாய்ப்பிருக்கிறது.
குரு 12ல் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகளும் கூடிக் கொண்டே போகும். நல்லவர்கள், நீண்டகால நண்பர்களுடன் சிறுசிறு விவாதங்கள் வந்துபோகும். சனியும், ராகுவும் 5ம் வீட்டிலேயே தொடர்வதால் மனக்குழப்பங் களும், தடுமாற்றங்களும் கொஞ்சம் இருந்து கொண்டேயிருக்கும். உறவினர்களுக்காக நாம் எவ்வளவு கொடுத்து உதவினாலும் நமக்கு நல்ல பெயர் இல்லையே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டே போகும். அடிவயிற்றில் வலி வரக்கூடும். தண் ணீர் அதிகமாக குடியுங்கள்.
அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப் பாருங்கள்.
கன்னிப் பெண்களே! கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள்.
மாணவர்களே! சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். பெற்றோரின் அரவணைப்பு உண்டு.
கேது லாப வீட்டில் நிற்பதால் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகரிக்கும். வேலையாட்களால் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பங்குதாரருடன் இருந்த மோதல்களும் விலகும். வாகன உதிரி பாகங்கள், பூ, ஸ்டேஷனரி வகைகளால் ஆதாயமடைவீர்கள். புதிய வாடிக்கையாளர்களும்
வருவார்கள். அலுவலகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரிகளின் பாராட்டால் உற்சாகமடைவீர்கள்.
2ந் தேதி முதல் செவ்வாய் 10ல் அமர்வதால் உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். ஆனால், உங்களுக்கு சத்ரு ஸ்தானத்திற்குரியவராகவும் செவ்வாய் வருவதால் மறைமுக எதிர்ப்புகளும் வந்துபோகும்.
கலைத்துறையினரே! உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.
விவசாயிகளே! அயராத உழைப்புக்கேற்ற பலன் கிடைக் கும். முற்பகுதி அலைச்சலை தந்தாலும் பிற்பகுதியில் அதிரடி முன்னேற்றம் தரும் மாதமிது.
ராசியான தேதிகள்:
பிப்ரவரி 13, 14, 15, 16, 23, 24, 25, 26, 27 மார்ச் 4, 5, 6, 7, 13
சந்திராஷ்டம தினங்கள்:
மார்ச் 8, 9 ஆகிய நாட்களில் மனதில் இனம்புரியாத பயம் வரக்கூடும்.
பரிகாரம்:
கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருநல்லூர் ஆலயத்தில் தனிச் சந்நதியில் வீற்றிருக்கும் அஷ்டபுஜ காளியை தரிசித்து விட்டு வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.
0 comments:
Post a Comment