அறிவுக்கு எல்லை உண்டு. கற்பனைக்கு எல்லையில்லை என்பதை அறிந்தவர்கள் நீங்கள்தான். கடந்த ஒரு மாத காலமாக உங்கள் ராசிக்கு 8ம்
வீட்டிலேயே நின்றுகொண்டு உங்களை பாடாய்ப்படுத்தி, உங்களின் கையிருப்புகளையும் கரைத்ததுடன், கோபப்படுத்தி வேகமாக பேச வைத்துக் கொண்டிருக்கும் செவ்வாய் மார்ச் 2ந் தேதி முதல் 9ல் நுழைவதால் மனஉளைச்சல் நீங்கும். சாத்வீகமான எண்ணங்கள் வரும். பழைய பிரச்னையை மாறுபட்ட கோணத்தில் யோசித்து புதுத்தீர்வு காண வழி கிடைக்கும். பல வி.ஐ.பிகளை தெரிந்து வைத்திருந்தும் உங்களுக்கு அவசர நேரத்தில் யாரும் உதவ முன்வராமலிருந்தார்கள் அல்லவா! அந்த நிலை மாறும்.
சகோதர சகோதரிகள் உங்களிடமிருக்கும் நல்ல குணங்கள், உதவும் மனப் பான்மை இவற்றையெல்லாம் மறந்து விட்டு சின்னச் சின்ன குறைகளை பெரிதுபடுத்தி பேசினார்களே! இனி அவர்கள் உங்களுக்கு பக்க பலமாக இ ருப்பார்கள். சொத்து, பூமி சம்பந்தப்பட்ட வழக்கிலும் நல்ல தீர்ப்பு கிடைக்கும். என்றாலும் தந்தையாருடன் மோதல்கள் வரக்கூடும். அவரின் ஆரோக் யத்தில் அக்கறை காட்டுங்கள். ராசிக்கு 7ல் அமர்ந்துகொண்டு மனைவிக்கு தொந்தரவுகளை தந்து கொண்டிருந்த சூரியன் இப்போது 8ம் வீட்டில் நுழைந்திருப்பதால் மனைவிக்கு இருந்து வந்த மாதவிடாய்க் கோளாறு, முதுகு வலி நீங்கும். மனைவியோடு நிலவிய கருத்து வேறுபாடுகளும் விலகும்.
புதன் சாதகமாக இருப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். ஆனால், ஷேர் மார்க்கெட்டில் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டாம். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். மார்ச் 2ந் தேதி முதல் பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அவர்களுக்கு உயர்கல்வியிலும் ஆர்வம் உண் டாகும். குரு லாப வீட்டிலேயே தொடர்வதால் உறவினர்கள், நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். புகழ், கௌரவம் ஒருபடி உயரும். சுக ஸ்தானத் தில் சனியும், ராகுவும் நிற்பதால் பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து டென்ஷனாக வேண்டாம். அவற்றையெல்லாம் மறப்பது நல்லது. தாயா ருக்கு சளித் தொந்தரவு, மூச்சுத் திணறல் ஏற்பட்டு நீங்கும்.
அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்க்கட்சியினரை தாக்கிப் பேச வேண்டாம்.
கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும்.
மாணவர்களே! மதிப்பெண் உயரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.
வியாபாரத்தில் மாதத்தின் பிற்பகுதியில் லாபம் அதிகரிக்கும். நயமாகப் பேசி பாக்கிகளை வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொண்டு அதற்கேற்ப சில மாற்றங்கள் செய்வீர்கள். எலக்ட்ரிக்கல், கன்ஸ்ட்ரக்ஷன், உணவு வகைகளில் கணிசமாக லாபம் கூடும்.
10ல் கேது இருப்பதால் உத்யோகத்தில் நீங்கள் பொறுப்பாக நடந்து கொண்டாலும், மேலதிகாரி குறை கூறத்தான் செய்வார். சக ஊழியர்கள் உதவுவார்கள்.
கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள்.
விவசாயிகளே! புது இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். கரும்பு, சவுக்கு, தேக்கு வகைகளால் லாபமடைவீர்கள். இங்கிதமாகப் பேசி சாதிக்கும் மாதமிது.
ராசியான தேதிகள்:
பிப்ரவரி 15, 16, 17, 18, 19, 25, 26, 27, 28 மார்ச் 1, 6, 7, 8
சந்திராஷ்டம தினங்கள்:
மார்ச் 10, 11 ஆகிய தினங்களில் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்:
உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ராகவேந்திரர் ஆலயத்திற்குச் சென்று வாருங்கள். முதியோர் இல்லங்களுக்கு சென்று உதவுங்கள்.
0 comments:
Post a Comment