சிம்மம் - மாசி மாத ராசி பலன்கள் 2013


நெருக்கடி நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்காமல் அறிவு பூர்வமாக செயல்பட வேண்டும் என்பதை உணர்ந்தவர்களே! பிப்ர வரி 21ந் தேதி வரை 6ம் வீட்டிலேயே சுக்கிரன் மறைந்திருப்பதால் செலவினங்கள் அதிகரிக்கும். குடும்பத்திலும் கணவன்-மனைவிக்குள் வாக்குவாதங் கள் வரும். சமையலறை சாதனங்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் பழுதாகும். சிறுசிறு விபத்துகள் வரக்கூடும். சாலை விதிகளை மீறாமல் வாகனத்தை  இயக்குங்கள். பிப்ரவரி 22ந் தேதி முதல் சுக்கிரன் 7ல் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்க இருப்பதால் சோர்வு, களைப்பு நீங்கும்.

காது வலி, முதுகு  வலி, படபடப்பு, விபத்துகள் குறையும். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்கும் வாய்ப்பு  உண்டாகும். தள்ளிப்போய்க் கொண்டிருந்த மகளின் திருமணம் நல்ல வரன் வந்து முடியும். மகனுக்கு வேலையில் இடமாற்றம் உண்டாகும். உங்கள்  ராசிநாதனான சூரியன் 7ல் அமர்ந்து உங்கள் ராசியை பார்த்துக் கொண்டிருப்பதால் தைரியம் கூடும். சவாலான காரியங்களைக்கூட கையில் எடுத்து  முடிக்கத் துணிவீர்கள். ஆனாலும் கண் எரிச்சல், உஷ்ணத்தால் வேனல் கட்டி, தொண்டை வலி, சளித் தொந்தரவு வந்துபோகும்.

இந்த மாதம் புதன்  சாதகமாக இருப்பதால் சொந்த-பந்தங்களுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் மார்ச் 2ந் தேதி முதல் 8ல் சென்று மறைவதால் அநாவசியச் செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள். இரண்டு, மூன்று வேலைகளை ஒரேநாளில் பார்க்க வேண்டியது வரும். 3ல் சனியும், ராகுவும் நீடிப்பதால் தைரியமாக பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை யெல்லாம் நிறைவேற்றுவீர்கள். எளிய உடற்பயிற்சி மேற்கொண்டு ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவீர்கள்.

அரசியல்வாதிகளே! கட்சி மேலிடத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில திட்டங்கள் தீட்டுவீர்கள். ஆடை, அணிகலன்கள் சேரும்.

மாணவர்களே! படித்தால்  மட்டும் போதாது விடைகளை எழுதிப் பாருங்கள்.

வியாபாரத்தில் ஒரளவு லாபம் உண்டு. பழைய பாக்கிகளை போராடித்தான் வசூலிக்க வேண்டியது வரும். 22ந் தேதி முதல் புது வாடிக்கையாளர்கள்  அறிமுகமாவார்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். புது ஒப்பந்தங்களும் வரும். ஆனால், 2ந் தேதி முதல் போட்டிகள் அதிகரிக்கும். தொழில் ரகசியங்களை வெளியில் கசியாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

உத்யோகத்தில் நீங்கள் எவ்வளவு உழைத்தாலும் நற்பெயர் கிடைக்காது. சின்னச் சின்ன குறைகளை நேரடி அதிகாரி சுட்டிக் காட்டிக் கொண்டேயிருப்பார்.

கலைத்துறையினரே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

விவசாயிகளே!  மகசூலை அதிகப்படுத்த நவீன ரக உரங்களை கையாளுவீர்கள். கிணற்றில் ஊற்றுநீர் சுரக்கும். பொறுமையும், நிதானமும் தேவைப்படும் மாதமிது.

ராசியான தேதிகள்:

பிப்ரவரி 20, 21, 22, 27, 28 மார்ச் 1, 2, 3, 8, 9, 10, 11

சந்திராஷ்டம தினங்கள்:

பிப்ரவரி 13, 14 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய நாட்களில் அலைச்சல் அதிகரிக்கும்.

பரிகாரம்:

தஞ்சை பூமால் ராவுத்தர் வீதியிலுள்ள நிசும்பசூதனி ஆலயத்திற்குச் சென்று வாருங்கள். வயதானவர்களுக்கு கம்பளி வாங்கிக் கொடுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment