சில நேரங்களில் சிரித்துப் பேசினாலும் பல நேரங்களில் மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லுபவர்களே! கடந்த ஒரு மாதகாலமாக உங்கள் ராசிக்கு
5ம் வீட்டில் அமர்ந்து கொண்டு மனக்குழப்பங்களையும், பிள்ளைகளுடன் கருத்து மோதல்களையும், உறவினர்களால் செலவுகளையும், அலைச்சலையும் கொடுத்த சூரியன் இப்போது 6ல் அமர்ந்திருக்கிறார். 12ம் வீட்டிற்குரிய சூரியன் 6ல் அமர்வது விபரீத ராஜயோகத்தை தரக்கூடிய அமைப்பாகும். இந்த மாதம் முழுக்க சூரியன் 6ல் நிற்பதால் எல்லா வகையிலும் வெற்றி கிடைக்கும். அரைகுறையாக நின்ற காரியங்கள் நல்ல விதத்தில் முடியும்.
அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை குறைந்த வட்டி கடனைப் பெற்று பைசல் செய்ய முயற்சி செய்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகத் திரும்பும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பிப்ரவரி 21ந் தேதி வரை 5ம் வீட்டிலேயே யோகாதிபதியான சுக்கிரன் அமர்ந்திருப்பதால் பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. பிப்ரவரி 22ந் தேதி முதல் 6ல் சென்று சுக்கிரன் மறைவதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடிக்கு செலவுகள் இருக்கும். ஆனால், மார்ச் 2ந் தேதி முதல் 7ல் நுழைந்து உங்கள் ராசியை பார்க்க இருப்ப தால் உடல் உஷ்ணம் அதிகமாகும்.
கார உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். சகோதர, சகோதரிகளால் நல்லது நடக்கும். உங்கள் ராசிநாத னான புதன் 6ல் நிற்பதால் சளித் தொந்தரவு, வீசிங் பிரச்னை, நெருங்கிய உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வந்து செல்லும். பாதச் சனி தொடர் வதால் கண்ணை பரிசோதித்துக் கொள்ளுங்கள். இரவில் அதிக நேரம் கண் விழித்து எந்த காரியத்தையும் செய்ய வேண்டாம். பல்லில் ஈறு வீக்கம் கொள்ள வாய்ப்பிருக்கிறது. குரு 9ல் அமர்ந்து உங்கள் ராசியை பார்த்துக் கொண்டிருப்பதால் தன்னம்பிக்கை பெருகும். பெரிய பிரச்னைகள் வருவது போல தோன்றினாலும் கடைசி நேரத்தில் குறைந்துவிடும்.
அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.
கன்னிப் பெண்களே! காதல் கசக்கும். உயர் கல்வியில் கவனம் செலுத்துங்கள்.
மாணவர்களே! காலநேரத்தை வீணடிக்காமல் பாடத்தில் கவனம் செலுத்துங்கள். வகுப்பறையில் கேள்வி கேட்கத் தயக்கம் வேண்டாம்.
வியாபாரம் மந்தமாக இருக்கும். என்றாலும் சூரியனின் பலத்தால் கொஞ்சம் சூடுபிடிக்கும். வேலையாட்களால் நிம்மதி இழப்பீர்கள். பங்குதாரர்கள் சந்தர்ப்ப, சூழ்நிலை தெரியாமல் பேசுவார்கள். அனுசரித்துப் போவது நல்லது. ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு.
உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். மேலதிகாரி உங்களின் செயலை உற்று நோக்குவார். தேடிக் கொண்டிருந்த தொலைந்து போன பழைய ஆவணம் ஒன்று கிடைக்கும்.
கலைத்துறையினரே! கிடைக்கின்ற வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.
விவசாயிகளே! தரிசு நிலங்களை யும் இயற்கை உரத்தால் பக்குவப்படுத்தி விளையச் செய்வீர்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து காய் நகர்த்தி காரியம் சாதிக்கும் மாதமிது.
ராசியான தேதிகள்:
பிப்ரவரி 13, 14, 20, 21, 22, 23, 24, 25, 26 மார்ச் 4, 5, 7, 8, 13
சந்திராஷ்டம தினங்கள்:
பிப்ரவரி 15, 16 மற்றும் 17ந் தேதி மாலை 5 மணி வரை எதிலும் பொறுமை காப்பது நல்லது.
பரிகாரம்:
சீர்காழிக்கு அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள வைத்தியநாதரையும், தையல்நாயகியையும், முத்துக்குமாரசுவாமியையும் தரிசி த்து வாருங்கள். கட்டிடத் தொழிலாளிகளுக்கு பானகம் கொடுங்கள்.
0 comments:
Post a Comment