மற்றவர்களை உயர்வாக நினைக்கும் நீங்கள், சில நேரங்களில் உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக் கொள்வீர்கள். மொழியுணர்வு அதிகமுள்
ளவர்கள். உங்கள் ராசிநாதனான சுக்கிரன் இந்த மாதம் முழுக்க சாதகமான வீடுகளில் செல்வதால் மகிழ்ச்சி தங்கும். அவர் பிப்ரவரி 22ந் தேதி முதல் 5ல் நுழைவதால் மனப் போராட்டங்கள் ஓயும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆனால், ராசிநாதன் சுக்கிரனுடன், சூரியனும், செவ்வாயும் நிற்ப தால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். ஓய்வெடுக்க முடியாதபடிக்கு அலைச்சல் இருக்கும். என்றாலும் சுக்கிரன் வலுவாக இருப்பதால் அனைத்து இடர்பாடுகளையும் கடக்கும் சக்தி உண்டாகும்.
இந்த மாதம் பிறக்கும்போது சூரியன், செவ்வாய், புதன் ஆகிய கோள்கள் நிற்பதால் பிள்ளைகளின் ஆரோக்யத்தில் இந்த மாதம் முழுக்க கூடுதல் அக்கறை செலுத்துங்கள். குறிப்பாக 1ந் தேதி வரை அவர்களுக்கு சளித் தொந்தரவு, வயிற்று வலி, தலை வலி வரக்கூடும். உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துங்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வழக் கில் தீர்ப்பு தள்ளிப் போகும். மார்ச் 2ந் தேதி முதல் செவ்வாய் 6ல் மறைவதால் பிள்ளைகளின் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். ஆனால், மனைவிக்குரிய கிரகமும் சப்தமாதிபதியுமான செவ்வாய் 6ல் அமர்வதால் மனைவியுடன் மனஸ்தாபங்கள் வந்து செல்லும்.
மனைவிவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும். 8ல் குரு தொடர்வதால் சில நேரங் களில் தைரியம் குறையும். தன்னைப்பற்றி மற்றவர்கள் தவறாக நினைக்கிறார்களே! மதிப்பு, மரியாதை குறைந்து விடுமோ! வேறு ஏதேனும் ஆபத்து வந்து விடுமோ என்றெல்லாம் அச்சப்படுவீர்கள். ஆனால், குரு சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் பிரச்னைகளெல்லாம் தீரும். பிரச்னைகளுக்கு தீர்வும் கிடைக்கும். ஜென்மச் சனி நடைபெறுவதால் அவ்வப்போது தாழ்வுமனப்பான்மை வரும். அவற்றை யெல்லாம் யோகா, தியானம் மூலம் சரி செய்து கொள்ளுங்கள். நேரம் கிடைத்தால் குலதெய்வத்தை வணங்கி வருவது நல்லது. ராசியிலே ராகு நிற்பதால் ஆடம்பரமாக, அலங்காரமாகப் பேசுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம். பண விஷயத்தில் கறாராக இருங்கள்.
அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர் வம் காட்டுவது நல்லது.
கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள்.
மாணவர்களே! மந்தம், மறதி வந்து நீங் கும். நல்ல நட்புச் சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
வியாபாரத்தில் விளம்பர யுக்திகளை கையாண்டு, சலுகை திட்டங்களை அறிவித்து பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். சக ஊழியர்களிடம் இடைவெளி தேவை.
கலைத்துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள்.
விவசாயிகளே! பக்கத்து நிலக்கார ருடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். செலவினங்களோடு அலைச்சல் இருந்தாலும் அதிரடி முன்னேற்றங்கள் தரும் மாதமிது.
ராசியான தேதிகள்:
பிப்ரவரி 13, 14, 15, 16, 23, 24, 25, 26 மார்ச் 4, 5, 6, 7, 8, 13
சந்திராஷ்டம தினங்கள்:
பிப்ரவரி 17ந் தேதி மாலை 5 மணி முதல் 18 மற்றும் 19 ஆகிய தினங்களில் சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள்.
பரிகாரம்:
திருச்செந்தூர் முருகனை சஷ்டி திதியன்று தரிசித்து வாருங்கள். ரத்த தானம் செய்யுங்கள்.
0 comments:
Post a Comment