விருச்சிகம் - மாசி மாத ராசி பலன்கள் 2013


விவரமாகவும், விரிவாகவும் பேசும் நீங்கள் இனஉணர்வு அதிகம் உள்ளவர்கள். சீர்திருத்த சிந்தனை கொண்ட நீங்கள், எதிர்ப்புகளை கண்டு அஞ் சாதவர்கள்.
உங்கள் ராசியை குருபகவான் பார்த்துக் கொண்டிருப்பதால் ஏழரைச்சனியால் ஏற்படும் பாதிப்புகளும் தாக்கங்களும் குறையும். நல்லவர் களின் நட்பு கிடைக்கும். பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். முடிந்து வைத்திருந்த  காணிக்கையை செலுத்துவீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். மனைவிவழி உறவினர்களுக்கு உதவுவீர்கள். அவர்களுக்கு இருந்து  வந்த பிரச்னைகளை தீர்த்து வைப்பீர்கள். ராசிக்கு 6ல் கேது தொடர்வதால் மாறுபட்ட அணுகுமுறையால் எதிலும் வெற்றி பெறுவீர்கள்.

உங்களின்  புகழ், கௌரவம் உயரும். வீடு, மனை வாங்க முன் பணம் தருவீர்கள். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். யோகா, தியானத்தில் ஆர் வம் பிறக்கும். சித்தர் பீடங்களின் தொடர்பும் கிடைக்கும். உங்களுடைய ராசிக்கு சாதகமான வீடுகளில் சுக்கிரன் செல்வதால் பணவரவு உண்டு. சுபச்  செலவுகள் இருந்து கொண்டே இருக்கும். ராசிக்கு பிரபல யோகாதிபதியான சூரியன் 4ல் அமர்ந்திருப்பதால் வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு  வேலை அமையும். தந்தை வழியில் உதவிகள் கிட்டும். தந்தைவழி சொத்தும் வந்து சேரும். தந்தை வழி உறவினர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். அரசாங்க காரியங்கள் உடனடியாக முடியும். வழக்கிலும் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

உங்கள் ராசிநாதனான செவ்வாய் மார்ச் 2ந் தேதி முதல் 5ம் வீட்டில் அமர்வதால் பூர்வீகச் சொத்தை பராமரிக்க அதிகம் செலவு செய்ய வேண்டியது  வரும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக வழக்குகள் வரக்கூடும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளும் எடுக்க வேண்டாம். புதன் வலுவாக காணப்படுவதால் வெளிநாட்டில் இருப்பவர்கள், வேற்றுமதத்தை சார்ந்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். ஏழரைச்சனி நடைபெறுவதால் நயமாகப் பேசுகிறார்கள் என்று அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக் கொண் டிருக்காதீர்கள். ரகசியங்கள் ரகசியமாகவே இருப்பது நல்லது.

அரசியல்வாதிகளே! மேலிடத்திற்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள்.

மாணவர்களே! விளையாட்டில் பரிசையும் பாராட்டையும் பெறுவீர்கள். வகுப்பறையில் சக மாணவர்கள் மத்தியில் நற்பெயர் எடுப்பீர்கள்.

வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை தகர்த்தெறிவீர்கள்.

உத்யோகத்தில் உயர்வு உண்டு. சம்பள பாக்கியும் கைக்கு வந்து சேரும். எதிர்பார்த்திருந்த இடமாற்றமும் கிட்டும். திடீர் முன்னேற்றம் உண்டு. சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலையும் கிடைக்கும்.

கலைத்துறையினரே! பெரிய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

விவசாயிகளே! பக்கத்து நிலத்தையும் வாங்குமளவிற்கு வருமானம் உயரும். நெல், மஞ்சள், கிழங்கு வகைகளால் லாபமடைவீர்கள். சவால்களில் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

பிப்ரவரி 15, 16, 17, 18, 19, 25, 26, 27, 28 மார்ச் 1, 7, 8, 9, 10, 11

சந்திராஷ்டம தினங்கள்:

பிப்ரவரி 20, 21 மற்றும் 22ந் தேதி மாலை 4 மணி வரை யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

பரிகாரம்:

வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள தகட்டூர் காசி பைரவரை தரிசித்துவிட்டு வாருங்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment