தர்மம் தலைகாக்கும் என்பதை அறிந்த நீங்கள் நெருக்கடி நேரத்தில் பிறருக்கு உதவுவீர்கள். விவாதம் என வந்து விட்டால் விட்டுக் கொடுக்க மாட் டீர்கள்.
கடந்த ஒரு மாத காலமாக உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் அமர்ந்து கொஞ்சம் வேகமாகவும், காரமாகவும் பேச வைத்த சூரியன் இப்போது 3ல் நுழைந்திருப்பதால் உங்களின் புதிய முயற்சிகள் யாவையும் வெற்றி பெற வைப்பார். தடைகளெல்லாம் நீங்கும். அரசாங்கத்தில் பெரிய பதவியில் இ ருப்பவர்கள், அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். அவர்கள் மூலமாக கடினமான காரியங்களையும் நீங்கள் முடித் துக் காட்டுவீர்கள். தந்தைவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
தந்தையாருடன் இருந்த பிணக்குகள் நீங்கும். அவரின் ஆரோக்யம் சீராகும். ஊர் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். அதன் மூலம் உங்களின் மதிப்பும், மரியாதையும் கூடும். உங்களின் பூர்வ புண்ணியாதிபதியான செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் மகனுக்கு வேலை கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும். சொத் துப் பிரச்னையும் சாதகமாக முடிவடையும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருப்பதால் விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள்.
பணத் தட்டுப்பாடு இருந்தாலும் மற்றொரு பக்கம் பணவரவு உண்டு. பிப்ரவரி 22ந் தேதி முதல் சுக்கிரன் 3ல் சென்று மறைவதால் ஒரு வகையில் உங்களுக்கு நல்லது. 5ல் கேது நி ன்று சனி பார்த்துக் கொண்டேயிருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் தொலைதூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு முறைகளை அமைத்துக் கொள்ளுங்கள். ராசிநாதனான குரு 6ல் மறைந்திருப்பதால் மற்றவர்கள் தன்னைப்பற்றி தரக் குறைவாக நினைக்கிறார் களே! என்ற அச்சமெல்லாம் இருக்கும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
அரசியல்வாதிகளே! புதிய திட்டங்கள் நிறைவேறும்.
கன்னிப் பெண்களே! காதல் கைகூடும். தோற்றப் பொலிவு கூடும். பள்ளி மற்றும் கல்லூரி காலத் தோழியை சந்திப்பீர்கள்.
மாணவர்களே! வகுப்பாசிரியர், பெற்றோரின் ஆதரவால் முன்னேறுவீர்கள்.
சனியும், ராகுவும் லாப வீட்டிலேயே தொடர்வதால் வியாபாரத்தில் புது வழி கிடைக்கும். பங்குதாரரை மாற்றுவீர்கள். திடீர் லாபம் உண்டு. வராது என்றிருந்த பழைய பாக்கிகள் வசூலாகும். கடையை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது போன்ற முயற்சியில் இறங்குவீர்கள். கம்ப்யூட்டர், செல்போன் வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்யோகத்தில் கௌரவப் பிரச்னை, ஈகோ பிரச்னைகள் நீங்கும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். மூத்த அதிகாரிக்கு நெருக்கமாவீர்கள்.
கலைத்துறையினரே! நழுவிச் சென்ற வாய்ப்புகள் மீண்டும் தேடி வரும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.
விவசாயிகளே! உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். வட்டிக்கு வாங்கிய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறுவதுடன்
அந்தஸ்தும் ஒருபடி உயரும். மாதமிது.
ராசியான தேதிகள்:
பிப்ரவரி 19, 20, 21, 25, 26, 27, 28 மார்ச் 1, 2, 3, 9, 10, 11
சந்திராஷ்டம தினங்கள்:
பிப்ரவரி 22ந் தேதி மாலை 4 மணி முதல் 23 மற்றும் 24 ஆகிய தினங்களில் சில காரியங்களை போராடி முடிக்க வேண்டியது வரும்.
பரிகாரம்:
அருகிலுள்ள சிவாலய துர்க்கையை தரிசனம் செய்து வாருங்கள். சாலைப் பணியாளர்களுக்கு உதவுங்கள்.
0 comments:
Post a Comment