மகரம் - மாசி மாத ராசி பலன்கள் 2013


மற்றவர்களை மதிக்கும் குணம் கொண்ட நீங்கள் அறிஞர்களின் அருகில் இருக்க ஆசைப்படுவீர்கள். தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் முன்னே
றுவீர்கள். கடந்த மாதம் முழுக்க உங்கள் ராசியிலேயே நின்று முன்கோபம், சோர்வு, களைப்பை ஏற்படுத்திய, சூரியன் இப்போது உங்கள் ராசியை  விட்டு விலகி 2ல் அமர்ந்ததால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை விலகும். ஆழ்ந்த உறக்கமில்லாமல் தவித்தீர்களே இந்த மாதத்தில் நிம்ம தியாகத் தூங்குவீர்கள். ஆனால், 2ல் சூரியன் நிற்பதால் வார்த்தைகளில் கனிவு வேண்டும். சில நேரங்களில் கறாராகப் பேசி சிலரின் மனதை புண்படுத்துவீர்கள்.

கண் எரிச்சல் வரக்கூடும். இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். மார்ச் 1ந் தேதி வரை ராசிக்கு  2ல் செவ்வாய் தொடர்வதால் பணத் தட்டுப்பாடு இருக்கும். சகோதர, சகோதரிகளால் அலைச்சல்களும், செலவினங்களும் இருக்கும். ஆனால், 2ந்  தேதி முதல் 3ம் வீட்டில் நுழைவதால் தைரியம் பிறக்கும். மனக்குழப்பங்கள் நீங்கும். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை புரிந்து கொள்வார்கள். எதிர்பார்த்து ஏமாந்துபோன தொகை கைக்கு  வரும். நல்ல விலைக்கு வீட்டை விற்பீர்கள். ஒரு சொத்தை தந்துவிட்டு மற்றொரு சொத்தை வாங்குவீர்கள். தாயாருக்கு இருந்து வந்த முதுகு வலி,  மூட்டு வலி நீங்கும்.

தாயாருக்கு உங்களால் இயன்ற உதவிகளையும் செய்து கொடுப்பீர்கள். அவர்களின் மனம் நோகாமல் பார்த்துக் கொள்வீர்கள். கேது 4ல் நிற்பதால் தாயாருக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி அதிகம் உங்களால் உதவ முடியவில்லையே என்ற ஆதங்கம் இருக்கும். உங்களின் பிரபல  யோகாதிபதியான சுக்கிரனும், புதனும் இந்த மாதத்தில் வலுவாக காணப்படுவதால் பொதுஅறிவை வளர்த்துக் கொள்வீர்கள். குருபகவான் ராசிக்கு 5ம்  வீட்டில் வலுவாக தொடர்வதால் பூர்வீகச் சொத்து கைக்கு வரும். சொந்த ஊரில் செல்வாக்கு உயரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.
கன்னிப் பெண்களே! திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.

அரசியல்வாதிகளே! வாக்குறுதியை நிறைவேற்ற போராட வேண்டியது  வரும்.

மாணவர்களே! நீங்கள் நீண்ட நாட்களாக கேட்ட பொருளை வாங் கித் தந்து உற்சாகப்படுத்துவார்கள்.    

வியாபாரம் சூடு பிடிக்கும். இரட்டிப்பு லாபம் வரும்.  வேலையாட்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். ஸ்டேஷனரி, ஷேர், துணி, உணவு வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

சனியும், ராகுவும் 10ல் நீடிப்பதால் உத்யோகத்தில் அடுத்தடுத்து வேலைச்சுமையால் அவதிக்குள்ளாவீர்கள். அதிகாரிகள்  மத்தியில் உங்களைப்பற்றி நல்ல இமேஜ் உண்டாகும். சில சலுகைத் திட்டங்களும் கிடைக்கும். நிறுவனத்தின் சார்பாக அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். சக ஊழியர்கள் மத்தியிலும் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.

கலைத்துறையினரே! உங்களின் படைப்புகள் எல்லோராலும் பாராட்டப்படும்.

விவசாயிகளே! வற்றிய கிணற்றில் நீர் ஊற செலவு செய்து கொஞ்சம் தூர் வாருவீர்கள். பேச்சில் காரத்தை தவிர்த்து செயலில் வேகம் காட்ட வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்:

பிப்ரவரி 13, 14, 15, 16, 21, 22, 23 மார்ச் 2, 3, 4, 5, 11, 13

சந்திராஷ்டம தினங்கள்:

பிப்ரவரி 25, 26 மற்றும் 27ந் தேதி காலை 8.30 மணி வரை அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்:

மதுரைக்கு அருகேயுள்ள திருமோகூர் சக்கரத்தாழ்வாரை தரிசியுங்கள். தந்தையை இழந்த பிள்ளைக்கு உதவுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment