புரட்சிகரமான சிந்தனையை உடைய நீங்கள், எல்லோரும் எல்லாம் பெற வேண்டுமென்று நினைப்பீர்கள். பிறர் சொத்துக்கு ஆசைப்பட மாட்டீர்கள்.
உங்கள் ராசிநாதனான செவ்வாய் மார்ச் 1ந் தேதி வரை லாப வீட்டிலேயே வலுவாக நிற்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சவாலான காரி யங்களைக் கூட சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பெரிய பொறுப்புகள், கௌரவப் பதவிகள் கிட்டும். வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆனால் மார்ச் 2ந் தேதி முதல் செவ்வாய் 12ல் மறைவதால் கொஞ்சம் அலைச்சல், சோர்வு, களை ப்பு, முதுகு வலி வந்துபோகும்.
இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். சின்னச் சின்ன காயங்கள் ஏற்படக்கூ டும். இரும்புச் சத்து உடலில் குறையும். எனவே காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பூர்வ புண்யாதிபதியான சூரியன் இந்த மாதம் முழுக்க லாப வீட்டிலேயே நிற்பதால் அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மகனுக்கு ந ல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளின் ஆரோக்யம் சீராகும். பிப்ரவரி 22ந் தேதி முதல் சுக்கிரன் 11ம் வீட்டில் அமர்வதால் மனைவிவழியில் உதவிகள் உண்டு. மனைவிவழி உறவினர்களும் உறுதுணையாக இருப்பார்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் நண்பர்கள் உங்கள் தேவை யறிந்து உதவுவார்கள்.
பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். பிரபல யோகாதிபதியான குருபகவான் 2ம் வீட்டிலேயே நீடிப்ப தால் சாதூர்யமாகப் பேசி சில முக்கிய காரியங்களையெல்லாம் முடிப்பீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஆனாலும், ராசிக்குள்ளேயே கேது நிற்பதால் முன்கோபப்படுவீர்கள். கோபத்தை குறைக்க யோகா, தியானம் என மனப் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. ராகுவும், சனியும் 7ம் வீட் டிலேயே தொடர்வதால் கணவன்-மனைவிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள். கவனமாக இருங்கள்.
அரசியல்வாதிகளே! கட்சியின் மேலிடத்தில் உங்களின் கோரிக்கையை ஏற்பார்கள்.
மாணவர்களே! மதிப்பெண் கூடும்.
கன்னிப்பெண்களே! எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும்.
வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். கடையை விரிவுபடுத்துவது, சீர்படுத்துவது போன்ற முயற்சிகளும் வெற்றியடையும். அனுபவமுள்ள வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். ரியல் எஸ்டேட், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். குறிப்பாக 22ந் தேதி முதல் நிம்மதி உண்டு. அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். சம்பளப் பாக்கி தொகையும் கைக்கு வரும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.
கலைத்துறையினரே! உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
விவசாயிகளே! மாற்றுப் பயிரிட்டு வருமானத்தை பெருக்குவீர்கள். எல்லா வகையிலும் ஏற்றம் தரும் மாதமிது.
ராசியான தேதிகள்:
பிப்ரவரி 19, 20, 22, 27, 28 மார்ச் 1, 2, 8, 9, 10
சந்திராஷ்டம தினங்கள்:
மார்ச் 3ந் தேதி மாலை 4.30 மணி முதல் 4 மற்றும் 5ந் தேதி மாலை 6 மணி வரை திட்டமிட்ட பணிகள் தாமதமாக முடியும்.
பரிகாரம்:
சென்னை - சோழிங்கநல்லூர் பிரத்யங்கரா ஆலயத்தில் வீற்றிருக்கும் நீலசரஸ்வதியை வணங்கி வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.
0 comments:
Post a Comment