நகைச்சுவையாகவும் சமயோசித புத்தியுடனும் பேசும் நீங்கள், எதிரிகளையும் சிந்திக்க வைக்கும் செயல்திறன் கொண்டவர்கள். உங்களின் பிரபல
யோகாதிபதியான சுக்கிரன் இந்த மாதம் முழுக்க சாதகமான வீடுகளில் செல்வதால் நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் சுலபமாக நிறைவேறும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். பிள்ளை பாக்யம் உண்டு. புது வாகனம், புதுவீடு வாங்குவீர்கள். பழைய சொத்தை விற்று கடன் பிரச்னையை தீர்ப்பீர்கள். 5ல் சூரியன் நிற்பதாலும் 22ந் தேதி வரை செவ்வாயும் அதே 5ல் இருப்பதாலும் பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும்.
கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்க்கப் பாருங்கள். எடைமிகுந்த பொருட்களை தூக்காதீர்கள். பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். யாருக்கும் எதற்காகவும் வாக்குறுதி தர வேண்டாம். 23ந் தேதி முதல் செவ்வாய் 6ல் நுழைவதால் எதிர்ப்புகள் அடங்கும். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். 28ந் தேதி முதல் ராசிநாதன் புதன் 6ல் மறைவதால் சோர்வு, களைப்பு வரும்.
குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லாதீர்கள். குரு 9ல் தொடர்வதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். சின்னச் சின்ன சேமிப்புகள் இருக்கும். பாதச் சனி நடைபெறுவதால் அவ்வப்போது கை, காலில் அடிபடக்கூடும். வாகனத்தை இயக்கும்போது தலைக்கவசம் அணிந்து கொள்வது நல்லது. நான்கு சக்கர வாகனத்தை இயக்கும் போது சீட் பெல்ட் அணிந்து கொள்ளுங்கள்.
அரசியல்வாதிகளே, கட்சி மேல்மட்டத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
கன்னிப் பெண்களே, சமயோசித புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள். நண்பர்கள் சிலரின் சுயரூபத்தை இப்பொழுது உணருவீர்கள்.
மாணவர்களே, உங்களின் திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள்.
வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவுகள் எடுப்பீர்கள். புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நகை, ஜவுளி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் மூலம் ஆதாயமடைவீர்கள்.
உத்யோகத்தில் சின்னச் சின்ன அலைகழிப்புகள் இருக்கும். மேலதிகாரியின் குறை, நிறைகளையெல்லாம் சுட்டிக் காட்ட வேண்டாம்.
கலைத்துறையினரே, வசதி, வாய்ப்புகள் உயரும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.
விவசாயிகளே, நெல், காய்கறி, பழ வகைகளால் லாபம் பெருகும். விடாமுயற்சியால் வெற்றி பெறும் மாதமிது.
ராசியான தேதிகள்:
ஜனவரி 15, 17, 18, 25, 26, 27, 28, 30, பிப்ரவரி 3, 6, 7, 11, 12.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜனவரி 19, 20 மற்றும் 21ந் தேதி காலை 9.30 மணி வரை இனந்தெரியாத கவலைகள் வந்து போகும்.
பரிகாரம்:
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள முகாசாபரூரில் அருளும் பிரயோகச் சக்கரமேந்திய வரதராஜப் பெருமாளை தரிசித்து வாருங்கள். புற்றுநோயாளிகளுக்கு உதவுங்கள்.
0 comments:
Post a Comment