துலாம் தை மாத ராசி பலன்கள்


பிறர் சொத்துக்கு ஆசைப்படாத நீங்கள், தர்மம் தலை காக்கும் என்பதில் ஆழமான நம்பிக்கை உள்ளவர்கள். உங்கள் ராசிக்குள்ளேயே சனியும் ராகுவும் நிற்பதால் சில நேரங்களில் எதிர்மறை எண்ணங்கள் வரும். குழப்பங்களும்
தடுமாற்றங்களும் இருக்கும். கணவன்-மனைவிக்குள் கலகத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள். அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம். பெரிய நோய் இருப்பதைப் போல நீங்கள் நினைத்துக் கொள்வீர்கள். ஆனால், பாதிப்புகள் இருக்காது. செரிமானக் கோளாறு, தலைவலி வந்து நீங்கும். ஜென்மச் சனி நடைபெறுவதால் யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம்.

ராசிநாதன் சுக்கிரன் இந்த மாதம் முழுக்க சாதகமான வீடுகளில் செல்வதால் மனோபலம் அதிகரிக்கும். செல்வாக்கு கூடும். வெள்ளி ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழுதான வாகனத்தையும் மாற்றுவீர்கள். வீடு வாங்குவது, விற்பது நீங்கள் எதிர்பார்த்த விலைக்கு முடியும். கேட்ட இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். உங்களுடைய ராசிக்கு 4ம் வீட்டில் பாதகாதிபதி சூரியன் அமர்ந்திருப்பதால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும். அவருடன் மனத்தாங்கல் வரும். அரசு விவகாரங்களில் அலட்சியப் போக்கு வேண்டாமே. வீடு கட்ட அனுமதி சற்று தாமதமாகும்.

செவ்வாய் இந்த மாதம் முழுக்க சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் கணவன்-மனைவிக்குள் இருக்கும் கசப்புணர்வுகள் நீங்கும். அன்யோன்யம் அதிகரிக்கும். சொத்துப் பிரச்னைகள் முடிவுக்கு வரும். உங்களின் பாக்யாதிபதியான புதன் சாதகமாக இருப்பதால் பணம் வரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். 8ல் குரு நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சல், செலவினங்கள் இருக்கும்.  கேது 7ல் தொடர்வதால் படபடப்பு, சலிப்பு, சோர்வு, மனைவிக்கு மருத்துவச் செலவுகள், சிறுசிறு அறுவை சிகிச்சைகள் என வரும்.

அரசியல்வாதிகளே, ஆதாரமில்லாமல் எதிர்க்கட்சியினரை தாக்கிப் பேச வேண்டாம்.

கன்னிப் பெண்களே, பெற்றோரிடம் மனம் விட்டுப் பேசுங்கள்.

மாணவர்களே, படித்தால் மட்டும் போதாது விடைகளை எழுதிப் பாருங்கள்.

வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். வேலையாட்களால் பிரச்னைகள் தலை தூக்கும். ரியல் எஸ்டேட், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், சிமென்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்களுடன் மனப்போர் வந்து நீங்கும்.

உத்யோகத்தில் உயரதிகாரிகள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.

கலைத்துறையினரே, உதாசீனப்படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும்.

விவசாயிகளே, பூச்சித் தொல்லை, எலித் தொல்லையால் மகசூல் குறையும். பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். தொலை நோக்குச் சிந்தனையால் முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜனவரி 17, 18, 19, 20, 27, 28, 30,பிப்ரவரி 5, 6, 7, 8, 9.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜனவரி 21ந் தேதி காலை 9:30 மணி முதல் 22, 23ந் தேதி இரவு 9 மணி வரை முன்கோபத்தால் பகை உண்டாகும்.

பரிகாரம்:

விழுப்புரம் அருகே உள்ள பரிக்கல்லில் அருளும் லட்சுமி நரசிம்மரை தரிசித்து வாருங்கள். காகத்திற்கு சாதம் வையுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment