விருச்சிகம் தை மாத ராசி பலன்கள்


கல் நெஞ்சக்காரர்களையும் கனிவான பேச்சால் கரைக்கும் நீங்கள், எங்கு தட்டினால் எது விழும் என்பதை அறிந்தவர்கள். உங்கள் ராசியை குருபகவான் பார்த்துக் கொண்டிருப்பதால் கடினமான காரியங்களையும்
எளிதாக முடிப்பீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை வரத் தொடங்கும். குடும்பத்தில் அடுத்தடுத்து நல்லது நடக்கும். உறவினர்கள், விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.  ராசிக்கு சாதகமான வீடுகளில் சுக்கிரன் சென்று கொண்டிருப்பதால் சிலர் புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள்.

மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். ராசிநாதன் செவ்வாய் வலுவாக இருப்பதால் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளெல்லாம் வெளிப்படும். சொத்து, பாகப் பிரிவினை பிரச்னைகள் தீரும். பூர்வீக சொத்து பங்கையும் கேட்டு வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான சூரியன் 3ம் வீட்டில் அமர்ந்ததால் அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

கோயில் விழாக்கள், உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். புதன் சாதகமாக இருப்பதால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். நட்பு வட்டம் விரியும். ஏழரைச் சனி நடைபெறுவதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். டென்ஷனாவீர்கள். தன்னை யாரும் மதிக்கவில்லை என்றெல்லாம் சில நேரங்களில் நினைப்பீர்கள். காது, மூக்கு வலி, தொண்டை அடைப்பு, புகைச்சல் வரக்கூடும்.

அரசியல்வாதிகளே, கட்சி தலைமை உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்பை ஒப்படைக்கும்.

கன்னிப் பெண்களே, பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

மாணவர்களே, உயர்கல்வியில் கொஞ்சம் போராடி வெற்றி பெறுவீர்கள்.

வியாபாரத்தில் அதிரடி திட்டங்களைத் தீட்டுவீர்கள். வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். கம்ப்யூட்டர், செல்போன், கட்டிட உதிரி பாகங்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக் கொள்வார்கள்.

உத்யோகத்தில் நிம்மதி கிடைக்கும். தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

கலைத்துறையினரே, எண்ணங்கள் ஈடேறும். மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள்.

விவசாயிகளே, மகசூல் அதிகரிப்பால் சந்தோஷம் நிலைக்கும். நீர்பாசனப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். வெற்றிப் படியில் ஏறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜனவரி 16, 19, 20, 21, 22, 29, 30, 31, பிப்ரவரி 1, 7, 8, 9, 12.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜனவரி 23ந் தேதி இரவு 9 மணி முதல் 24, 25, 26ந் தேதி காலை 8:30 வரை பேச்சால் பிரச்னைகள் வந்து போகும்.

பரிகாரம்:

சென்னை-திருவொற்றியூரில் உள்ள பட்டினத்தார் ஜீவசமாதியை தரிசித்து வாருங்கள். உங்கள் ஊரில் உள்ள கோயிலுக்கு தீபமேற்ற எண்ணெய் வாங்கிக் கொடுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment