யதார்த்தமாக யோசிக்கும் நீங்கள், உங்கள் திறமை மீது அதிக நம்பிக்கை வைப்பீர்கள். கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்குள் அமர்ந்து கொண்டு உங்களை பாடாய்ப்படுத்திய சூரிய பகவான் இப்போது ராசியை
விட்டு விலகி, 2ம் வீட்டில் நுழைந்திருப்பதால் முன்கோபம் நீங்கும். பல்வலி, கண் எரிச்சல், பார்வைக் கோளாறு வரக்கூடும். உங்கள் ராசிக்குள்ளேயே சுக்கிரன் அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். 22ந் தேதிவரை செவ்வாய் 2ம் வீட்டிலேயே நிற்பதால் சொத்து வாங்கும்போது தாய் பத்திரத்தை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
23ந் தேதி முதல் 3ல் அமர்வதால் சொத்துப் பிரச்னைகள் தீரும். தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டிவரும். ராசிக்கு சாதகமான வீடுகளில் புதன் சென்று கொண்டிருப்பதால் நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். புது வேலை கிடைக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி கிட்டும். லாப வீட்டிலேயே சனியும் ராகுவும் நிற்பதால் வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும்.
வேற்றுமொழி, மதத்தை சார்ந்தவர்களால் நன்மை உண்டாகும். புதிதாக முதலீடு செய்து புதுத் தொழில் தொடங்குவதற்கு சில உதவிகள் கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். 5ல் நிற்கும் கேதுவும் 6ல் மறைந்திருக்கும் குருவும் உங்களுக்கு சோர்வு, களைப்பை ஏற்படுத்துவார்கள். பிள்ளைகளிடமும் சில சமயங்களில் கோபப்பட்டு பேசுவீர்கள். சிலர் உங்களைப் பற்றி தவறான வதந்திகளையும் பரப்புவார்கள். அடுத்தவர்கள் விவகாரத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்காதீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.
அரசியல்வாதிகளே, சகாக்களைப் பற்றிக் குறைகூற வேண்டாம். உட்கட்சி பூசல் வெடிக்கும்.
கன்னிப் பெண்களே, எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும்.
மாணவர்களே, மதிப்பெண் உயரும். ஆசிரியரின் அன்பை பெறுவீர்கள்.
முற்பகுதி வியாபாரம் சுமாராக இருக்கும். மாதத்தின் பிற்பகுதியில் லாபம் அதிகரிக்கும். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். சிலர் சொந்த தொழில் தொடங்குவீர்கள். செங்கல், உணவு, இரும்பு வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
கலைத்துறையினரே, அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும்.
விவசாயிகளே, மகசூலை அதிகப்படுத்த இயற்கை உரங்களை கையாளுங்கள். ஏமாற்றங்கள், எதிர்ப்புகளை கடக்கும் மாதமிது.
ராசியான தேதிகள்:
ஜனவரி 14, 15, 21, 22, 23, 31,பிப்ரவரி 1, 2, 3, 4, 9, 10, 12.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜனவரி 26ந் தேதி காலை 8:30 மணி முதல் 27, 2ந் தேதி மாலை 6 மணி வரை தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும்.
பரிகாரம்:
ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்துவிட்டு வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவி செய்யுங்கள்.
0 comments:
Post a Comment