மகரம் தை மாத ராசி பலன்கள்


இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை உணர்ந்த நீங்கள், உங்களுக்குக் கீழே இருப்பவர்களைப் பற்றி அதிகம் யோசிப்பீர்கள். உங்கள் ராசிக்குள் சூரியன் நுழைந்திருப்பதால் ஆரோக்யத்தில் அக்கறை
காட்டுங்கள். அதிக நேரம் வேலைப் பார்க்க வேண்டி வரும். உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி வரக்கூடும். எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். அரசு காரியங்கள் இழுபறியாகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளையெல்லாம் உடனுக்குடன் செலுத்தப் பாருங்கள்.

உங்களின் பாக்யாதிபதி புதன் சாதகமாக இருப்பதால் செலவுக்குத் தகுந்தாற் போல் பணவரவு உண்டு. செல்வாக்கு கூடும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.  பூர்வீக சொத்தில் மராமத்து வேலைகள் பார்ப்பீர்கள். 22ந் தேதிவரை உங்கள் ராசிக்குள்ளேயே செவ்வாய் இருப்பதால் அவ்வப்போது எரிச்சலாக பேசுவீர்கள். 23ந் தேதி முதல் ராசியை விட்டு விலகி 2ல் அமர்வதால் நிதானம் வரும். பிரச்னைகளும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். இந்த மாதம் முழுக்க பிரபல யோகாதிபதியான சுக்கிரன் சாதகமாக இருப்பதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.

புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே, நல்ல பதில் வரும். ஆடை, ஆபரணம் சேரும். குருபகவான் சாதகமாக இருப்பதால் ஊர் பொது விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள். மழலை பாக்யம் உண்டு. பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். உங்கள் ராசிநாதன் சனிபகவான் உச்சம் பெற்று காணப்படுவதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

அரசியல்வாதிகளே, எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப் பாருங்கள்.

கன்னிப் பெண்களே, நல்ல வரன் அமையும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

மாணவர்களே, ஞாபகசக்தி அதிகரிக்கும். யோகா ஆசிரியரிடம் முறைப்படி சூரிய நமஸ்காரம் கற்றுக் கொண்டு தொடர்ந்து செய்யுங்கள்.

வியாபாரத்தில் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் இணைவார். பிளாஸ்டிக், ஆட்டோமொபைல் உதிரி பாகங்களால் லாபம் பெருகும்.

உத்யோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். புது அதிகாரியால் மதிக்கப்படுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள்.

கலைத்துறையினரே, மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களையும் கற்றுத் தெளிவீர்கள்.

விவசாயிகளே, வீட்டில் நல்லது நடக்கும். காய்கறி, பயிறு வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். மதிப்பு, மரியாதை கூடும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜனவரி 15, 16, 17, 18, 19, 20, 24, 25, 27, பிப்ரவரி 3, 4, 5, 6, 12.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜனவரி 28ந் தேதி மாலை 6 மணி முதல் 29, 30 ஆகிய நாட்களில் விவாதங்களை தவிர்க்கப் பாருங்கள்.

பரிகாரம்:

சென்னை-திருவான்மியூரில் அருளும் மருந்தீஸ்வரரை தரிசியுங்கள். மூலிகைச் செடிகளை வளர்த்துப் பராமரியுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment