தன் கையே தனக்குதவி என்று வாழும் நீங்கள், கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறி வாழ்வின் சிகரத்தை எட்டிப் பிடிப்பவர்கள். உங்களின்
பிரபல யோகாதிபதிகளான புதனும் சுக்கிரனும் ஓரளவு சாதகமாக இருப்பதால் கட்டுக்கடங்காமல் போகும் செலவுகளை சரி செய்வீர்கள். ஒரு பக்கம் செலவுகள் இருந்தாலும் மறுபக்கம் பணவரவு உண்டு. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். இந்த மாதம் முழுக்க சூரியன் 12ல் மறைந்திருப்பதால் தூக்கமில்லாமல் போகும். வேலைச்சுமை அதிகரிக்கும். வருங்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும்.
22ந் தேதி வரை செவ்வாய் ராசிக்கு 12ல் மறைந்திருப்பதால் சின்னச் சின்ன விபத்துகள் ஏற்படக்கூடும். சகோதரர்களால் அலைச்சல், மனத்தாங்கல் வந்து செல்லும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். ஆனால் 23ந் தேதி முதல் உங்கள் ராசிக்குள் நுழைவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது சாதகமாக அமையும். பாகப்பிரிவினை பிரச்னைகளை சுமுகமாக பேசி முடிப்பீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.
ஆனால், ராசிக்கு 4ல் குரு நிற்பதால் அலைச்சல், டென்ஷன் இருக்கும். ஆங்காங்கே பகை உணர்வு உண்டாகும். சிலரின் நட்பை முன்கோபத்தால் இழக்க நேரிடும். தாயாருடனும் கருத்து மோதல்கள் வரும். 3ம் வீட்டில் கேது தொடர்வதால் ஆன்மிகவாதிகள், அறிஞர் பெருமக்கள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். உங்கள் ராசிநாதன் சனிபகவான் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் எதிலும் தன்னம்பிக்கை பிறக்கும். ஆனால், சனிபகவானும் ராகுவும் நிற்பதால் அடிக்கடி மந்த நிலை உண்டாகும்.
அரசியல்வாதிகளே, கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
கன்னிப் பெண்களே, காதல் கைக்கூடும். தகுதிக்கேற்ப நல்ல வேலை அமையும்.
மாணவர்களே, அதிகாலையில் எழுந்து படியுங்கள்.
வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்களை அனுபவ அறிவால் சரி செய்வீர்கள். சுமுகமான லாபம் உண்டு. வேலையாட்கள், பங்குதாரர்கள் உங்களின் கோரிக்கையை ஏற்பார்கள். கெமிக்கல், எண்ணெய் வித்துகள், இறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.
உத்யோகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதமாக கிடைக்கும். உங்களை எதிரியாக நினைத்த சக ஊழியர்கள் இனி வலிய வந்து நட்புறவாடுவார்கள்.
கலைத்துறையினரே, உங்கள் புகழ் கூடும். சம்பளப் பாக்கி கைக்கு வரும்.
விவசாயிகளே, மாற்றுப் பயிரால் வருமானத்தை பெருக்குவீர்கள். சிக்கனமும் பொறுமையும் தேவைப்படும் மாதமிது.
ராசியான தேதிகள் :
ஜனவரி 17, 18, 19, 20, 22, 26, 27, 28, 30 பிப்ரவரி 5, 6, 7, 8.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய நாட்களில் வீண் குழப்பங்கள் வந்து செல்லும்.
பரிகாரம்:
கொல்லூர் மூகாம்பிகையை தரிசித்து வாருங்கள். முதியோர்களுக்கு போர்வை வாங்கிக் கொடுங்கள்.
0 comments:
Post a Comment