மீனம் தை மாத ராசி பலன்கள்


யாரையும் சார்ந்திருக்காமல் சுதந்திரமான வாழ்வை விரும்பும் நீங்கள், அவ்வப்போது ஆறாவது அறிவுக்கு வேலை தருபவர்கள். உங்கள் ராசிக்கு
சாதகமான வீடுகளில் சுக்கிரன் சென்று கொண்டிருப்பதால் தைரியமாக பெரிய முடிவுகளை எடுக்கலாம். செலவு எவ்வளவு வந்தாலும் பணப்புழக்கமும் அதிகரிக்கும். எங்கு சென்றாலும் வெற்றி பெறுவீர்கள். மனைவி நீண்ட காலமாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். பிள்ளைகளின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். 22ந் தேதி வரை பிரபல யோகாதிபதி செவ்வாய் பகவான் லாப வீட்டில் நிற்பதால் காலி மனையை விற்று புதுவீடு வாங்குவீர்கள்.

சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். 23ந் தேதி முதல் 12ல் சென்று மறைவதால் எடுத்து வைக்க முடியாதபடி, சேமிக்க முடியாதபடி, செலவுகள் இருக்கும். தந்தையாரின் உடல் நிலை லேசாக பாதிக்கும்.  சகோதரர்களாலும் அலைச்சல், ஏமாற்றம் வந்து செல்லும். இந்த மாதம் முழுவதும் சூரியன் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் வழக்குகள் சாதகமாகும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வேலை கிடைக்கும். கிரகப் பிரவேசம், காது குத்து என அடிக்கடி குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.  புதன் சாதகமாக இருப்பதால் புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

என்றாலும் அஷ்டமத்திலே சனியும் ராகுவும் வலுவாக அமர்ந்திருப்பதால், நெடுநாட்களாக நீங்கள் நம்பிக் கொண்டிருந்தவர்களெல்லாம் உங்களுக்கு துரோகம் செய்ய வாய்ப்பிருக்கிறது.  முக்கியமான ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. முடி உதிர்தல், பல்வலி, கண் பார்வைக் கோளாறு வந்து போகும். ராசிநாதன் குரு 3ல் முடங்கிக் கிடப்பதால் முன்கோபத்தால் பிரச்னைகள் வரும்.

அரசியல்வாதிகளே, இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே, எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும்.

மாணவர்களே, கவிதை, இலக்கிய போட்டிகளில் கலந்து கொள்வீர்கள்.

வியாபாரத்தில் சில அதிரடி மாற்றங்களை செய்வீர்கள். ஏஜென்சி, கலை சாதனப் பொருட்கள், துணி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள்.

உத்யோகத்தில் மேலதிகாரி புகழ்வார். உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள்.

கலைத்துறையினரே, மூத்த கலைஞர்களின் அறிவுரை கிடைக்கும். அரசு பிரமுகர்களின் நட்பு கிடைக்கும்.

விவசாயிகளே, பூச்சிக் கடி, வண்டுக் கடியிலிருந்து பயிரைக் காக்க நவீனரக மருந்துகளை பயன்படுத்துவது நல்லது. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். நினைத்ததை முடித்துக் காட்டும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜனவரி 19, 20, 22, 25, 26, 29, 30, 31, பிப்ரவரி 1, 7, 8, 9.

சந்திராஷ்டம தினங்கள்:

பிப்ரவரி 2, 3, 4ந் தேதி காலை 8:30 மணி வரை சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும்.

பரிகாரம்:

திருச்சி அருகே உள்ள உறையூரில் அருளும் வெக்காளியம்மனை வணங்குங்கள். பசுவிற்கு உணவு கொடுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment