கருணை உள்ளமும் கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும் நல்லதையும் பேசும் குணமும் உடைய நீங்கள், முன் வைத்த காலை பின் வைக்காதவர்கள். கடந்த ஒரு மாத காலமாக உங்கள் ராசிநாதன் சூரியன் 5ல் அமர்ந்து கொண்டு
அவ்வப்போது மனக்குழப்பங்களையும் முன்கோபத்தையும் பிள்ளைகளால் அலைச்சலையும் அவர்களின் வருங்காலம் குறித்து கவலைகளையும் தந்து கொண்டிருந்தார். இப்போது 6ம் வீட்டில் நுழைந்திருப்பதால் அச்சம் நீங்கும். தடைகள் விலகும். அரைகுறையாக நின்ற காரியங்களையெல்லாம் நல்ல விதத்தில் முடித்துக் காட்டுவீர்கள்.
குடும்பத்தில் வீண் விவாதங்களெல்லாம் நீங்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வழக்குகள் சாதகமாகும். வேலை கிடைக்கும். அயல்நாடு செல்ல எதிர்பார்த்திருந்த விசா கிடைக்கும். சிலர் வீடு மாறுவீர்கள். சிலர் புது வீடு வாங்குவீர்கள். 28ந் தேதி வரை 5ம் வீட்டில் சுக்கிரன் நிற்பதால் குழந்தை பாக்யம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். புதிய ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஆனால், 29ந் தேதி முதல் சுக்கிரன் 6ல் மறைவதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும்.
28ந் தேதி முதல் புதன் 7ல் நுழைவதால் உறவினர், நண்பர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். ராசிக்கு 3ம் வீட்டில் சனி, ராகு வலுவாக இருப்பதால் முடிக்க முடியாத சவாலான சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். 10ல் குரு நிற்பதால் எதிலும் ஒரு பயம் இருக்கும். அடிக்கடி மனஉளைச்சலுக்கு ஆளாவீர்கள். நேரம் கிடைக்கும்போது யோகா, தியானம் செய்வது நல்லது.
அரசியல்வாதிகளே, கட்சி மேலிடம் உங்கள் கோரிக்கையை ஏற்கும்.
கன்னிப்பெண்களே, நீங்கள் நினைத்தது நிறைவேறும்.
மாணவர்களே, படிப்பில் ஆர்வம் பிறக்கும். விளையாட்டில் பதக்கம் வெல்வீர்கள்.
வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வரும். பங்குதாரர்கள் உங்களை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பார்கள். ஷேர்,ஸ்பெகுலேஷன், மூலிகை வகைகளால் ஆதாயம் உண்டு.
குரு 10ல் இருப்பதால் உத்யோகத்தில் ஒரு நிலைத்த தன்மையில்லாமல் எந்த நேரத்தில் என்னவாகுமோ என்ற பயம் இருக்கும். சக ஊழியர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
கலைத்துறையினரே, புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.
விவசாயிகளே, உங்களின் கடுமையான உழைப்பிற்கு ஏற்ப மகசூல் கூடும். வங்கிக் கடன் கிடைக்கும். திடீர் யோகங்களையும், வெற்றிகளையும் தரும் மாதமிது.
ராசியான தேதிகள்:
ஜனவரி 14, 15, 22, 23, 24, 29, 30, 31 பிப்ரவரி 1, 2, 9, 10.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜனவரி 16ந் தேதி மாலை 3 மணி முதல் 17, 18 ஆகிய நாட்களில் புது முடிவுகளை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்:
சுவாமிமலை முருகனை வியாழக்கிழமையன்று தரிசித்து வாருங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியருக்கு உதவுங்கள்.
0 comments:
Post a Comment