பூவைப்போல மென்மையான மனசும் கனிவான குணமும் உடைய நீங்கள், எப்போதும் தன்னலம் கருதாமல் பிறர் நலம் பேணுபவர்கள். 28ந் தேதி உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் சுக்கிரன் மறைந்திருப்பதால் செலவினங்களு
ம் சின்னச் சின்ன விபத்துகளும் வந்து போகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. திடீரென்று அறிமுகமாகிறவர்களை வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். கேஸ் அடுப்பை கவனமாக பயன்படுத்துங்கள். 29ந் தேதி முதல் சுக்கிரன் 7ல் அமர்வதால் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.
பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். வாகனப் பழுது நீங்கும். இந்த மாதம் முழுக்க சூரியன் 7ல் நிற்பதால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். மனைவிக்கு சின்னச் சின்ன அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். 22ந் தேதிவரை செவ்வாய் பகவான் 7ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் வீடு, மனை வாங்குவீர்கள். ஆனால், 23ந் தேதி முதல் 8ல் மறைவதால் எந்த சொத்து, நிலம், வீடு, மனை வாங்குவதாக இருந்தாலும் தாய் பத்திரத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள். சகோதர வகையில் அலைச்சல், பிணக்குகள் வரும்.
புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் மகிழ்ச்சி உண்டு. குரு லாப வீட்டிலேயே நீடிப்பதால் வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். 4ல் சனி அமர்ந்து அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வீடு கட்டுவது, வாங்குவது, விற்பதில் கவனமாக இருங்கள்.
அரசியல்வாதிகளே, தலைமையிடம் சிலர் உங்களைப் பற்றி புகார் பட்டியல் வாசிப்பார்கள். கவனமாக இருங்கள்.
கன்னிப் பெண்களே, காதல் கைக்கூடும்.
மாணவர்களே, டி.வி. பார்த்துக் கொண்டே படிப்பது, பாட்டு கேட்டுக் கொண்டே எழுதுவது எல்லாம் இனி வேண்டாம். பொறுப்பாக படியுங்கள்.
வியாபாரத்தில் அவசரப்பட்டு பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். அரிசி, எண்ணெய், இரும்பு வகைகளால் ஆதாயமடைவீர்கள்.
4ல் ராகுவும் 10ல் கேதுவும் இருப்பதால் உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். விரும்பத் தகாத இடமாற்றங்கள் வரும். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம்.
கலைத்துறையினரே, உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.
விவசாயிகளே, மாற்றுப் பயிரால் லாபமடைவீர்கள். அனுபவ அறிவைப் பயன்படுத்தி அமைதியாக காய் நகர்த்த வேண்டிய மாதமிது.
ராசியான தேதிகள்:
ஜனவரி 18, 19, 20, 22, 23, 29, 30, 31, பிப்ரவரி 1, 2, 6, 7.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜனவரி 14ந் தேதி காலை 9 மணி முதல் 15, 16ந் தேதி மாலை 3 மணி வரை மற்றும் பிப்ரவரி 10ந் தேதி மாலை 5 மணி முதல் 11, 12 ஆகிய தினங்களில் எதிர்பார்த்தவை தாமதமாக முடியும்.
பரிகாரம்:
திருச்சியிலுள்ள ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வாருங்கள். மரக்கன்று நட்டுப் பராமரியுங்கள்.
0 comments:
Post a Comment