மிதுனம் தை மாத ராசி பலன்கள்


என் கடன் பணி செய்து கிடப்பதே என்று கால நேரம் பாராமல் கடினமாக உழைப்பவர் நீங்கள். 22ந் தேதிவரை செவ்வாய் 8ம் வீட்டிலேயே நிற்பதால்
அலைச்சல், சின்ன சின்ன மன இறுக்கங்கள் என வந்து செல்லும். வாகனத்தை வேகமாக இயக்க வேண்டாம். எந்த காரியத்தை செய்தாலும் கொஞ்சம் யோசித்து செய்யுங்கள். சிலர் உங்களை தூண்டிவிட்டு, சீண்டி விட்டு சினம் கொள்ள வைத்து வேடிக்கை பார்ப்பார்கள். சொத்து விஷயத்திலும் நீங்கள் கொஞ்சம் அனுசரித்துப் போவது நல்லது.  நல்ல ஊக்கமுள்ள வழக்கறிஞரை சேர்த்துக் கொள்வீர்கள்; நல்ல திருப்பம் ஏற்படும்.

23ந் தேதி முதல் 9ல் செவ்வாய் நுழைவதால் சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கி ஒற்றுமை பிறக்கும். ஒரு சொத்தை விற்று, மற்றொரு சொத்து வாங்குவீர்கள். வீடும் மனையும் உங்கள் ரசனைப்படியே அமையும். உங்கள் ராசியை சுக்கிரன் பார்த்துக் கொண்டிருப்பதால் அழகு, இளமை கூடும். மகளுக்கு நல்ல வரன் அமையும். 29ந் தேதி முதல் சுக்கிரன் 8ல் மறைந்தாலும் பணவரவிற்கு பஞ்சமிருக்காது. சூரியன் 8ல் இந்த மாதம் முழுக்க நிற்பதால் இளைய சகோதர வகையில் மனத்தாங்கல், அலைச்சல் வந்து போகும்.

லாப வீட்டில் கேது இருப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். ஆன்மிகவாதிகள் ஆசி கிடைக்கும். 5ல் சனியும் ராகுவும் சேர்ந்திருப்பதால் பிள்ளைகளுக்கு கொஞ்சம் அலைச்சலும் ஆரோக்ய குறைவும் வந்து போகும். 12ல் குரு தொடர்வதால் கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். 28ந் தேதி முதல் ராசிநாதன் புதன் 9ல் அமர்வதால் தடைப்பட்ட காரியங்கள் முடியும்.

அரசியல்வாதிகளே, சகாக்கள் மத்தியில் கட்சி மேல்மட்டத்தை விமர்சித்துக் கொண்டிருக்காதீர்கள்.

கன்னிப் பெண்களே, தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள்.

மாணவர்களே, அதிகாலையில் எழுந்து படிப்பது முக்கியம்.

மாதத்தின் முற்பகுதி வியாபாரம் மந்தமாக இருக்கும். பிற்பகுதியில் சூடுபிடிக்கும். பற்று வரவு உயரும். ஏற்றுமதி, இறக்குமதி, ஸ்டேஷனரி வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

உத்யோகத்தில் மாதத்தின் முற்பகுதியில் வேலைச்சுமை அதிகரிக்கும். பிற்பகுதியில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களிடம்  சொந்த விஷயங்களையெல்லாம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

கலைத்துறையினரே, சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

விவசாயிகளே, விளைச்சலில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பூச்சித் தொல்லை கட்டுப்படும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜனவரி 16, 17, 18, 19, 20, 22, 27, 28, 30, பிப்ரவரி 5, 6, 7, 12.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜனவரி 14ந் தேதி காலை 9 மணி வரை மற்றும் பிப்ரவரி 8ந் தேதி மதியம் 2:30 மணி முதல் 9, 10ந் தேதி மாலை 5 மணி வரை செலவினங்கள் அதிகரிக்கும்.

பரிகாரம்:

பிள்ளையார்பட்டி சென்று கற்பகவிநாயகரை தரிசித்து வாருங்கள். ஏழை மாணவனின் கல்விக்கு உதவுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment