பிரச்னைகளை சமாளிக்கும் அளவிற்கு தன்னம்பிக்கை கொண்ட நீங்கள், மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்ய தயங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 28ந் தேதி வரை 8ம் வீட்டில் மறைந்திருப்பதால்
பயணங்களும் சுபச் செலவுகளும் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் அதிகரிக்கும். 29ந் தேதி முதல் 9ல் சுக்கிரன் அமர்வதால் எதிலும் வெற்றி, மகிழ்ச்சி உண்டு. பணவரவும் திருப்திகரமாக இருக்கும்.
சுகாதிபதி சூரியன் ராசிக்கு 9ல் நுழைந்திருப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். ஆனால், தந்தையாருக்கு அடிக்கடி ஆரோக்ய குறைவு ஏற்படும். தந்தைவழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து போகும். புதன் சாதகமான வீடுகளில் சென்று கொண்டிருப்பதால் பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சகோதரர்கள் உதவுவார்கள்.
உங்கள் ராசியிலேயே குருபகவான் தொடர்வதால் கோபத்தை கட்டுப்படுத்தப் பாருங்கள். மற்றவர்கள் ஏதேனும் தவறு செய்தாலும் உங்கள் தலையில்தான் அது வந்து விழும்; கவனம். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து, நேர்மறையாக யோசியுங்கள். தலைவலி, வயிற்றுக் கோளாறு வரக்கூடும். குடிநீரைக் காய்ச்சி அருந்துங்கள். 6ல் சனியும் ராகுவும் நிற்பதால் எத்தனை பெரிய இடர்பாடுகள் வந்தாலும் அவற்றை எல்லாம் சாமர்த்தியமாக சமாளிக்கும் சக்தி கிடைக்கும். பழைய வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பெரிய பொறுப்புகள், பதவிகளுக்கு எல்லாம் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பழைய எதிரிகள் நண்பர்களாவார்கள்.
அரசியல்வாதிகளே, தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்திற்கு கொண்டுச் செல்லுங்கள்.
கன்னிப் பெண்களே, முகப்பரு நீங்கி தோற்றப் பொலிவு கூடும். மாணவர்களே, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். கணிதம், வரலாற்று பாடத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்யலாம். கமிஷன், ரியல் எஸ்டேட், புரோக்கரேஜ் வகைகளால் லாபமடைவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
உத்யோகத்தில் சின்ன சின்ன போராட்டங்கள் இருந்தாலும் அதையும் தாண்டி முன்னேறுவீர்கள். மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும்.
கலைத்துறையினரே, உங்களின் புது முயற்சிகள் மூத்த கலைஞர்களின் ஆதரவால் வெற்றியடையும்.
விவசாயிகளே, புதிதாக நிலம் வாங்குவீர்கள். பழுதான பம்பு செட்டை மாற்றுவீர்கள். மாதத்தின் தொடக்கம் கொஞ்சம் தொந்தரவு தந்தாலும் மையப் பகுதி மகிழ்ச்சியையும் இறுதிப் பகுதி வெற்றியையும் தரும்.
ராசியான தேதிகள்:
ஜனவரி 14, 15, 16, 17, 18, 20, 25, 26, 27, 28, 30, பிப்ரவரி 3, 5, 9, 12.
சந்திராஷ்டம தினங்கள்:
பிப்ரவரி 6ந் தேதி காலை 11:30 மணி முதல் 7, 8ந் தேதி மதியம் 2:30 மணி வரை யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
பரிகாரம்:
பழநி முருகனை தரிசித்து வாருங்கள். ரத்த தானம் செய்யுங்கள்.
0 comments:
Post a Comment