சாமர்த்திய மிதுனம்’ என்பதற்கேற்ப எந்தச் செயலிலும் தங்களது சாதூர்ய குணத்தை வெளிப்படுத்தும் குணமும் கொண்ட மிதுன ராசி வாசகர்களே!
பாக்கியஸ்தானத்தில் ராசிநாதன் புதன் இருப்பதால் மிகுந்த அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். சூரியனின் அமைப்பால் வீண் கலகமும் அலைச்சலும் இருக்கும், இருப்பினும் குருவின் பார்வை அவர்மீது விழுவதால் காரிய அனுகூலமும் நற்சுகமும் பொருளாதார மேம்பாடும் உண்டாகும். மதிப்பு மரியாதை கூடும். லாபஸ்தானத்தில் இருக்கும் கேதுவால் முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வரலாம். சுகஸ்தானத்தை பார்க்கும் குருவின் பலத்தால் தடைகளை முறியடித்து காரிய வெற்றி காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவார்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். உத்யோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கோரிக்கைகள், ஒப்பந்தங்கள் நிறைவேறும். மேலதிகாரிகள் ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் எடுப்பீர்கள். சம்பள உயர்வு உண்டு. சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைக்கும். தொழில் செய்வோருக்கு கடந்த காலத்தை விட வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். லாபம் கூடும். அதேநேரம் சனியுடன் இருக்கும் ராகு சாதகமாக காணப்படாததால் நீங்கள் தொழிலில் அதிக அக்கறை காட்ட வேண்டியிருக்கும்.
வேலை இல்லாமல் இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற காலகட்டமிது. பணத்தைவிட அதிக உழைப்பின் மூலம் செய்யும் தொழிலால் அதிக வருவாய் உண்டு. தீவிர முயற்சியின் பேரிலேயே அரசிடம் இருந்து கோரிக்கைகள் நிறைவேறும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் சிறப்படைய மிகுந்த முயற்சி தேவை. மாணவமணிகளுக்கு அனுகூலமான போக்கே காணப்படுகிறது. நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். கைவிட்டுப்போன சொத்துக்கள் மீண்டும் வந்து சேரும்.
பரிகாரம்:
புதன்தோறும் பெருமாளுக்கு நல்லெண்ணெய் மற்றும் நெய் கலந்து விளக்கு ஏற்றவும்.
சந்திராஷ்டம தினங்கள்:
9, 10 போன்ற தேதிகளில் ஜாமீன், கேரண்டர் கையெழுத்துக்களை தவிர்க்கலாம்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
‘கலையாத கல்வியும்’ என்று ஆரம்பிக்கும் அபிராமி அந்தாதி பாடலை தினமும் பாராயணம் செய்யுங்கள்.
மலர் பரிகாரம்:
மரிக்கொழுந்தை அம்மனுக்கு சாற்றுங்கள்.
0 comments:
Post a Comment