எருது துரிது’ என்பதற்கேற்ப எதிலும் அவசரகதியில் காரியத்தை கச்சிதமாக முடிக்கும் ரிஷப ராசி அன்பர்களே! தற்போதைய காலகட்டத்தில் ராசிநாதன்
சுக்கிரன் ஒன்பதிலும் ராசியில் குரு என்றும் இருக்கிறது. மனதில் பட்டதை பளிச்சென்று சொல்வீர்கள். ராசியில் குரு இருந்தாலும் சனிக்கு ராசிநாதனான சுக்கிரன் கேந்திரத்தில் இருப்பதாலும் நல்ல பலன்கள் உண்டு. இதுவரை இருந்து வந்த பலவிதமான பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். பின்தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களுடைய உடல்நலத்தைப் பொறுத்த வரை கால் மற்றும் சரும நோய்கள் வரலாம். சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம்.
குடும்பத்தில் தம்பதியரிடையே இருந்து வந்த பிரச்னைகள் சுமுகமாக தீரும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும்போது கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் அன்யோன்யமாக இருப்பர். ராசியை விரயாதிபதி செவ்வாய் பார்ப்பதால் உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு வந்து சேரும். எதிர்பார்த்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும். மேலதிகாரிகள் அனுசரணையாக இருப்பர். வியாபாரிகள் சிறப்பான முன்னேற்றத்தைப் பெறலாம்.
உங்கள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். எதிரிகளை வீழ்த்துவதற்குண்டான பாதைகளை வகுத்துக் கொள்வீர்கள். புதியதாக ஆரம்பித்த தொழிலில் ஏற்றம் உண்டு. இரும்பு தொடர்பான தொழிலில் அதிக வருவாய் வந்து சேரும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் சற்று தாமதமாக வந்தாலும் முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். பொருளாதாரம் எதிர்பார்த்தபடி இருக்காது. அரசியல்வாதிகள் சீரான பலனை எதிர்பார்க்கலாம். மாணவமணிகள் சிரத்தை எடுத்துப் படிப்பர். ஆனாலும் கல்வி ஸ்தானத்தை செவ்வாய் பார்ப்பதால் உங்கள் முயற்சிக்குத் தகுந்த பலன்கள் வந்தே தீரும். வழக்கு விவகாரங்கள் மேலும் தள்ளிப் போகும்.
பரிகாரம்:
வியாழக்கிழமைதோறும் சிவன் கோயிலை வலம் வாருங்கள்.
சந்திராஷ்டம தினங்கள்:
7, 8 தினங்களில் பிரயாணங்களின்போது உடைமைகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
தினமும் ஸ்ரீமகாலட்சுமி காயத்ரி மந்திரத்தைப் படியுங்கள்.
மலர் பரிகாரம்:
துளசி மாலையை பெருமாளுக்கு அர்ப்பணிக்கவும். நலன்கள் பெருகும்.
0 comments:
Post a Comment