உணர்ச்சிக் கடகம்’ என்பதற்கேற்ப அனைவரது உணர்ச்சிகளையும் மதிக்கும் கடக ராசி வாசகர்களே! ராசியை சனி பார்த்தாலும் குருபகவான் உங்களுடைய
பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் நன்மைகள் கிடைக்கக் கூடிய காலகட்டமாகும். எடுத்த காரியம் கைகூடும். பணப் புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு மேம்படும். உங்கள் சொல்லுக்கு பிறர் மரியாதை கொடுப்பார்கள். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கலாம். நண்பர்கள் இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். அவர்களால் உதவிகள் பெறலாம். சுபநிகழ்ச்சிகளுக்கு இப்போது திட்டமிடலாம். வெகுநாட்களாக தடைப்பட்டு வந்த திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை இப்போது தொடங்கலாம்.
புதிய வீடு கட்டுவதற்கான வேலைகளையும் இப்போது தொடங்கலாம். புதிய ஆபரணங்கள் வாங்கலாம். விருந்து விழா என உல்லாசப் பயணம் மேற்கொள்வீர்கள். சந்தானபாக்கியம் ஏற்படும். உத்யோகஸ்தர்கள் நல்ல வளர்ச்சியைக் காணலாம். உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் தவறை உணர்ந்து உங்களிடமே வந்து சரணடைவார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்ததை விட அதிகமாகக் கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் வந்து சேரும். தொழில்புரிவோருக்கு இருந்து வந்த மந்தநிலை மறையும். அலைச்சலும் வேலைபளுவும் ஓரளவு இருக்கத்தான் செய்யும். அதே வேளையில் நீங்கள் சென்ற இடமெல்லாம் அனுகூலம் ஏற்படும். சேமிப்புகள் அதிகரிக்கும். நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். படிப்படியாக லாபம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். புதிய தொழில் தொடங்குவற்குண்டான வேலைகளுக்கு அரசாங்க அனுகூலம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். ஏற்கனவே இருந்து வந்த பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். நெடுநாட்களாக வராமல் இருந்த பணம் வரும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. உங்கள் சொல்லுக்கு பிறர் கட்டுப்படுவார்கள்.
பரிகாரம்:
திங்கள்தோறும் சிவனையும் அம்பாளையும் வணங்குங்கள்.
சந்திராஷ்டம தினங்கள்:
11, 12 தேதிகளில் வேகமாக வாகனத்தை இயக்காதீர்கள்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
‘‘ஓம் ஈஸ்வரவல்லபாயை நமஹ’’ என்று தினமும் 12 முறை சொல்லவும்.
மலர் பரிகாரம்:
மல்லிகையை அம்மனுக்கு சாத்தவும்.
0 comments:
Post a Comment