சிம்மம் பெருமை’ என்பதற்கேற்ப எந்தக் காரியத்தை கொடுத்தாலும் அதில் பெருமை தேடித்தரும் சிம்ம ராசி வாசகர்களே! ராசிநாதனான சூரியன் 6ல்
இருக்கிறார். தனாதிபதி புதனையும் தனஸ்தானத்தையும் பத்தில் இருக்கும் குருபகவான் பார்க்கிறார். மாத பிற்பகுதியில் ஏழில் தனாதிபதி உலவுகிறார். பொருளாதார வளம் சீராக இருக்கும். அதே வேளையில் செலவும் அதிகரிக்கலாம். சிக்கனம் தேவை. குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். மனைவி வழியில் சில கருத்து வேறுபாடுகள் வரலாம். ஆனாலும் அது நொடிப் பொழுதில் சரியாகி விடும். மனதில் நிம்மதியும் ஆனந்தமும் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும்.
சந்தான பாக்கியம் கிடைப்பதற்கு யோகமான காலகட்டம் இது. புதிய வீடு, மனை, வாங்க தடைகள் ஏற்படலாம். ராசிநாதன் ஆறில் மறைந்திருப்பதால் உத்யோகஸ்தர்கள் அதிக வேலைப்பளுவை சுமந்தாலும் அனைத்தையும் சுலபமாகச் செய்வீர்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகளுக்கு உங்களுடைய வியாபாரம் சீராக நடக்கும். அதிக உழைப்பை செய்தவர்களுக்கு ஏற்ற பொருளாதார வளம் வந்து சேரும். புதிய தொழில் ஆரம்பித்தவர்களுக்கு பொன்னான காலகட்டம் இது. லாபம் குவியும். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்குள் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். வரவு செலவுக் கணக்கில் இருந்து வந்த சந்தேகங்கள் நீங்கும்.
சுக்கிரன் ராசிநாதனுடன் சஞ்சரிப்பதால் கலைத்துறையினருக்கு மிகப் பொன்னான காலமிது. சிறிது முயற்சி எடுத்தாலும் வாய்ப்புகள் வந்து குவியும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். வித்யாஸ்தானதிபதி செவ்வாய் ஏழில் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் மாணவமணிகள் சிறிது சிரத்தை எடுத்தாலே பெரிய அளவில் வெற்றி பெறலாம். அனைத்திலும் நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கும். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி கிடைக்கும். உடல் நலம் சிறப்படையும். பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் நீங்கும். சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு தேவை.
பரிகாரம்:
ஞாயிற்றுக்கிழமைதோறும் சிவன் கோயிலில் உள்ள கால பைரவரை வணங்குங்கள்.
சந்திராஷ்டம தினங்கள்:
13, 14 தேதிகளில் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
‘‘ஓம் சிவஸ்வரூபாயை நமஹ’’ என்று தினமும் 108 முறை சொல்லவும்.
மலர் பரிகாரம்:
வில்வ தளங்களை சிவனுக்கு அர்ப்பணிக்க, காரியத்தில் வெற்றி நிச்சயம்.
0 comments:
Post a Comment