வில்லுக்கு சீரிய சிந்தனை’ என்பதற்கேற்ப எதிலும் நேர்மையுடனும் நேர்மறையான சிந்தனைகளுடனும் இருந்து காரியத்தை சாதிக்கும் தனுசு ராசி
அன்பர்களே! ராசிக்கு தன ஸ்தானத்தில் பாக்கியாதிபதி சூரியனும் லாபாதிபதி சுக்கிரனும் இருக்க ராசிநாதன் குருவும் பார்க்க என்று ஓரளவு நல்ல பலன்களையே கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். இறையருளும் தெய்வ நம்பிக்கையும் கூடும். உங்கள் திறமையில் இருந்து வந்த பின்தங்கிய நிலை இனி மாறும். மூன்றாம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் தைரியமாக பீடு நடை போட்டு உங்கள் வேலைகளை செய்வீர்கள்.
மாத முற்பாதியில் வாக்கு ஸ்தானத்தில் இருக்கும் சூரியனால் கொடுத்த வாக்கை காப்பாற்ற போராட்டம் ஏற்படலாம். பிற்பாதியில் அவர் மூன்றாமிடத்திற்கு சஞ்சாரம் செய்யும்போது கொடுத்த வாக்கை காப்பாற்றுவதும் வரவேண்டிய கடன்களை பைசல் செய்வதும் நடந்தேறும். தம்பதிகளுக்குள் இணக்கமான சூழ்நிலை நிலவினாலும் மனைவி வழியிலுள்ள உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும்போது மிகுந்த எச்சரிக்கை தேவை. முயற்சிகளில் தடைகள் வந்தாலும் இறைவனின் வல்லமையால் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணிப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரலாம். ஐந்தாமிடத்தில் கேது இருந்தாலும் குறைகளை உருவாக்க மாட்டார்.
லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் தன தைரிய வீரிய ஸ்தானாதிபதியான சனி எட்டாமிடத்தையும், ராசியையும் பார்க்கிறார் என்பதால் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். ஒன்பதாம் அதிபதி சூரியன் அந்த ஸ்தானத்திற்கு ஆறில் மறைந்தாலும் அந்த ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால் காரிய அனுகூலம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள் வரலாம். பாக்கிய ஸ்தானத்தை செவ்வாய் பார்ப்பதால் வரவுக்கேற்ற செலவுகளும் வந்து சேரும்.
பரிகாரம்:
வியாழக்கிழமை தோறும் உங்களுக்குப் பிடித்தமான குருவின் கோயிலுக்குச் சென்று வணங்கி வாருங்கள்.
சந்திராஷ்டம தினங்கள்:
23, 24 தேதிகளில் இரவு நேரப் பிரயாணங்கள் வேண்டாம்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
‘‘ஓம் பத்மப்ரியாயை நமஹ’’ என தினமும் 6 முறை சொல்லவும்.
மலர் பரிகாரம்:
பெருமாள் கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை போட, வெற்றிகள் குவியும்.
0 comments:
Post a Comment