மகரம் பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2013


மகரம் பணி’ என்பதற்கேற்ப எந்த வேலையைக் கொடுத்தாலும் சோம்பலில்லாமல் செய்யத் துடிக்கும் மகரராசி அன்பர்களே! சில நன்மைகள்
தரக்கூடிய வகையில் ராசிநாதனான சனி சஞ்சரிக்கிறார். ராசிநாதனான சனி பத்தில் அமர, லாபாதிபதியான செவ்வாய் ராசிக்கு தன ஸ்தானத்தில் இருக்க என்று கிரகநிலை நல்ல நிலையில் இருப்பதால் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பொருளாதார வளம் மேம்படும். தொழில் உன்னத நிலையை அடையும். குடும்பத்தில் முன்னேற்றமும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். ஆனால், அஷ்டம பாக்யாதிபதி சூரியன் ராசியில் அமர்வதால் பணவிரயமும் காரியத் தாமதமும் ஏற்படலாம். எனினும் எந்த பிரச்னையையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும்.

பிள்ளைகள் வழியில் சிற்சில கசப்பூட்டும் சம்பவங்கள் நடந்தாலும் சில அனுகூலமும் ஏற்படும். அவர்களால் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கலாம். உத்யோகம் பார்ப்பவர்களுக்கு இது சிறப்பான காலகட்டமாகும். தொழிலில் நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் பிரத்யேகமான சலுகைகளை பெற முடியாமல் போகலாம். ஆனாலும் பதவி உயர்வும் சம்பள உயர்வும் தங்கு தடையின்றி கிடைக்கும். வெளிநாடு சென்று பொருள் ஈட்டி வருவீர்கள். வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். நல்ல லாபம் கிடைக்கும். வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும்.

கலைஞர்கள் நல்ல புகழும் பெருமையும் கிடைக்கப் பெறுவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியல்வாதிகள், சமூக சேவை செய்வோர் நல்ல செல்வாக்கோடு காணப்படுவர். உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். மாணவமணிகள் சிறப்பான பலனைக் காணலாம். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக  இருக்கும். கைவிட்டுப்போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

பரிகாரம்:

சனிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வாருங்கள். நீராஞ்சன தேங்காய் தீபம் ஏற்றவும்.

சந்திராஷ்டம தினங்கள்:

25, 26, 27 ஆகிய தேதிகளில் வாகனங்களை மெதுவாக இயக்குங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

‘‘ஓம் ஹரிவல்லபாயை நமஹ’’ என்று தினமும் 16 முறை சொல்லவும்.

மலர் பரிகாரம்:

மரிக்கொழுந்து அல்லது துளசியை பெருமாளுக்குச் சாத்துங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment