கும்பம் பந்தம்’ என்பதற்கேற்ப சொந்த பந்தங்களின் மேல் அதீத பாசம் வைத்திருக்கும் கும்பராசி வாசகர்களே! சில நன்மைகளை அளிக்கும்
வகையில் குருபகவானும் ராசிநாதனான சனியும் சஞ்சரிக்கிறார்கள். உங்களின் பொருளாதார வலிமை கூடும். சுகஸ்தானாதிபதி சுக்கிரன் விரய ஸ்தானத்தில் இருப்பதால் வாழ்க்கையில் பொன்னான வாய்ப்புகள் தேடிவரும். வாழ்க்கை வளம் முன்னேறும். மூன்றாமிடத்து அதிபதி செவ்வாய் ராசியில் இருப்பதால் தைரியமாக பீடு நடை போட்டும் அதே வேளையில் தெய்வ அனுகூலத்துடனும் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். சகோதர சகோதரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். சுக ஸ்தானத்தில் இருக்கும் குருவால் வேலை செய்யும் இடத்தில் சிற்சில பிரச்னைகள் தீர்ந்து நன்மையான விஷயங்கள் வந்து சேரலாம்.
குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆனாலும், வீட்டில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் தலை தூக்கலாம். சிலருக்கு தூரத்திலிருந்து விரும்பத்தகாத செய்திகள் வரலாம். தீவிர முயற்சிகளின் பேரில் சிலருக்கு சுபமான நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உத்யோகம் பார்ப்பவர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் நன்மை நடக்கும். சிலருக்கு இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும். உடன் பணிபுரிவோரால் அனுகூலம் உண்டு. உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும்.
தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடலாம். கூட்டு வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எதிலும் முதலீடு செய்வதற்கு முன்பு குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து கொள்ளவும். இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்திட முயற்சியுங்கள். கலைத்துறையினருக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிப்பது நல்லது.
பரிகாரம்:
சனிக்கிழமைதோறும் சனி ஹோரையான காலை 6-7 மணிக்குள் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.
சந்திராஷ்டம தினங்கள்:
1, 2, 28 ஆகிய தேதிகளில் ஜாமீன், கேரண்டர் கையெழுத்து போடாதீர்கள்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
‘‘ஓம் வேங்கடஹரிப்ரியாயை நமஹ’’ என்று தினமும் 21 முறை சொல்லவும்.
மலர் பரிகாரம்:
அரளி மலரை அம்மனுக்கு சாத்தவும். தைரியம் தருவாள் தயாபரி.
0 comments:
Post a Comment