மீனம் பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2013


மீனம் ஓட்டம்’ என்பதற்கேற்ப வாழ்க்கையில் கடுமையான உழைப்பிற்கு எப்போதுமே தயங்காத முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக செயல்படும்
மீனராசி அன்பர்களே! எந்தத் துறையிலும் முத்திரையை பதிப்பீர்கள். மூன்றாம் இடத்தில் இருக்கும் ராசிநாதனான குருவால் இடம் விட்டு இடம் பெயரும் சூழ்நிலை உருவாகும். தராதரமறிந்து பழக வேண்டும். உறவினர்கள் வகையில் வீண் மனக்கசப்பு வரலாம். வெளியூர் பயணம் ஏற்படும். அதீத உழைப்பின் மூலமே அனைத்து நற்பலன்களையும் பெற முடியும். எட்டாம் இடத்தில் இருக்கும் சனி, ராகுவால் பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் முன்னேற்றங்களையும் பெறலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த தடைகள் அகலும். பொருளாதார வளத்தையும் மூன்றாம் இடத்தில் இருக்கும் குரு அள்ளித் தருவார்.

குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் பெருகும். உறவினர்கள் வகையில் நிலவி வந்த பிரச்னைகள் அனைத்தும் அடியோடு மறையும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பெண்களால் அனுகூலம் கிடைக்கும்.  குழந்தை பாக்கியம் கிட்டும். வீடு, மனை வாங்கும் யோகம் சிலருக்கு கூடி வரும். மாத பிற்பாதியில் புதிய சொத்துக்கள் வாங்க நேரம் கைகூடி வரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். ஆனால், அதற்காக சிலர் கடன் வாங்க வேண்டி வரலாம். உத்யோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் இருப்பார்கள்.

வேலையின்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப் பெறலாம். வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.  புதிய வியாபாரம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும். மாணவர்கள் தொடர்ந்து சிறப்பான நிலையில் இருப்பார்கள். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மாதத்தின் முன்பகுதி நன்றாக இருக்கும். எதிர்பார்த்த பதவியை அடையலாம். பெண்கள் உற்சாகமாக காணப்படுவர். கணவரின் அன்பும் பாசமும் கிடைக்கும். பித்தம், மயக்கம் தொடர்பான உபாதைகள் வரலாம்.

பரிகாரம்:

அருகிலிருக்கும் கோயிலுக்குச் சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும்.

சந்திராஷ்டம தினங்கள்:

3, 4 போன்ற தேதிகளில் இரவுப் பயணத்தை தவிர்ப்பது நல்லது.

சொல்ல வேண்டிய மந்திரம்:

‘‘ஓம் நமசிவாய’’ என்கிற மந்திரத்தை தினமும் 27 முறை சொல்லவும்.

மலர் பரிகாரம்:

அம்மனுக்கு சாமந்திப் பூவை சாத்தி வணங்குங்கள்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment