விருச்சிகம் பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2013


உழைப்பவரே உயர்ந்தவர்’ என்பதற்கேற்ப உழைப்பை மட்டுமே நம்பி சாதனைகளை புரிய விருப்பப்படும் விருச்சிக ராசி அன்பர்களே!
தனபூர்வபுண்ணியாதிபதி குரு ஏழாம் இடத்தில் இருந்து பல்வேறு நற்செயல்களை நடத்திக் கொண்டிருக்கிறார். ராசிநாதனான செவ்வாய் சுகஸ்தானத்தில் இருந்து வாழ்க்கைத்துணை ஸ்தானத்தையும் தொழில் ஸ்தானத்தையும் லாபஸ்தானத்தையும் பார்க்கிறார். குடும்பத்தில் இருந்துவந்த  குழப்பங்கள் மறையும். ஏழரைச் சனி விரய ஸ்தானத்திலிருந்து சிற்சில குழப்பங்களை விளைவித்தாலும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.  தைர்ய வீர்ய ஸ்தானாதிபதியான சனி அந்த ஸ்தானத்திற்கு பத்தாம் இடத்தில் இருப்பதாலும் ராகுவுடன் சேர்ந்திருப்பதாலும் தைரியம் பளிச்சிடும்.

எந்த வேலையிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். ஆறில் இருக்கும் கேதுவால் பித்தம், வயிறு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் சில பாதிப்புகள் வரலாம். உணவுக் கட்டுப்பாடு அவசியம். தந்தை, தந்தை வழி உறவினர்கள், பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம்.  சுபச் செலவுகள் நிகழும். எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். சுகஸ்தானாதிபதி சனி தனஸ்தானத்தை பார்ப்பதால் வரவுக்கு எந்தவித குறையும் இருக்காது. லாப ஸ்தானத்தை ராசிநாதன் செவ்வாய் பார்ப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த வாராக்கடன் வசூலாகும். உத்யோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.

பணத்தை விட அறிவை மூலதனமாக வைத்து செய்யப்படும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அதேநேரம் சில புதிய வியாபார யுக்திகளை நீங்கள் பயன்படுத்த வேண்டியது வரும். தீவிர முயற்சிகளினாலேயே அரசு சார்ந்த காரியங்கள் நடைபெறும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூக சேவையில் உள்ளவர்களுக்கு மாத முற்பகுதி மிகுந்த உற்சாகமாக இருக்கும்.

பரிகாரம்:

செவ்வாய்க்கிழமை தோறும்  முருகன் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றவும்.

சந்திராஷ்டம தினங்கள்:

20, 21, 22 ஆகிய தேதிகளில் தொழில்ரீதியான புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடாமல் இருப்பது நல்லது.

சொல்ல வேண்டிய மந்திரம்:

‘‘ஓம் மங்களபுத்ர வாசனாய நமஹ’’ என்று தினமும் 21 முறை சொல்லவும்.

மலர் பரிகாரம்:

பிச்சிப்பூ வாங்கி அருகிலிருக்கும் முருகனுக்கு மாலையாக சாத்தி வழிபடவும். மிகுந்த நன்மைகள் கிடைக்கும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment