கடகம்:
புனர்பூசம்(4;) பூசம்; ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.
[ சாத்கமான காலம்: 31.1.2013 முதல் 26.5.2013 வரை. மற்றும் 8.11.2013 முதல் ஆண்டின் இறுதிவரை.
சாதகமற்ற காலம்:--27.5.2012 முதல் 7.11.2013 வரை . மற்றபடி, சனி,ராகு மற்றும் கேது முதலிய கிரக சஞ்சாரங்கள் சரியில்லை. மேலும் குருவின் சஞ்சாரம் 27.5.2013 முதல் 7.11.2013 வரை சரியில்லை. ஆண்டின் துவக்கம் முதல் 30.1.2013 வரை.]
இந்த ஆண்டின் தொடக்கம் முதல் மாத இறுதியான 30.1.2013 வரை குரு பகவான் வக்கிர சஞ்சாரம் செய்கிறார். அப்போது உங்களுக்கு நற்பலகளை எதிர்பார்க்க முடியாது. நினைத்தபடி நடக்காது. எதைத் தொட்டாலும் ஜவ்வு மாதிரி இழுத்துக்கொண்டே போகும். சட்டென்று எதுவும் நடக்காது. வியாபாரம் மந்த நிலையில் இயங்கும். பண வரவு திருப்திகரமாக இருக்காது. உங்கள் முயற்சிகளில் தடை வரலாம். சிலருக்கு உடல்நலத்தில் சின்னச் சின்ன தொந்தரவுகள் வந்து சேரும். வரவேண்டிய பணமும் சரியான நேரத்துக்கு கைக்கு வராது. வருமானம் குறைவாகவும் செலவுகள் அதிகமாகவும் இருக்கும். சுப நிகழ்ச்சிகள் கிட்ட வந்து தள்ளிப்போகும். சிலர் சரியான நேரத்துக்கு வேலைக்குப் போகமுடியாதபடி ஏதாவது தொல்லைகள், வரும். இதனால் அடிக்கடி லீவு போட்டு மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாவீர்கள். இப்படிப் பலவிதமான கஷ்ட நஷ்டங்க இந்த குரு வக்கிர கதியில் சந்திக்க வேண்டி வரும்.
அதன்பிறகு 31.1.2013 முதல் 26.5.2013 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு பலவித யோகங்களை வழங்கும். இத்தகு யோகமான குருபலன் இந்த வருடம் மே மாதம் 26-ம் தேதிவரை நீடிக்கும்.
ஆண்டு தொடக்கத்தில், குருபகவான் உங்கக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு பண வரவு பெருகும். வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு பிழைப்புக்கு வழி கிடைக்கும் வண்ணம் ஏதாவதொரு வேலை கிடைத்துவிடும். ஏற்கெனவே வேலையில் உள்ளவர்களுக்கும் உத்தியோக உயர்வு கிடைத்து அதன்மூலம் வருமானம் பெருகும். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வரும். முன்னேற்றத் திட்டங்களுக்காக எதிர்பார்த்த இடத்திலிருந்தும் வங்கியிலிருந்தும் கடன் கிடைக்கும். இப்படியெல்லாம் தனகாரகனான குருபகவானுடைய தயவில் பலவகையிலும் பணம் , ஆதாயம் என்று வருவதற்கு இனிமேல் பலவ வழிகளும் திறந்து உங்களுக்கு வாழ்த்துக்கூறும். ஏற்கெனவே அடமானத்தில் இருந்த நகைநட்டுக்களையும் மீட்டுக் கொள்வீர்கள். புதிய பொன்னாபரணங்களையும் வாங்குவீர்கள். அலங்கார சாதனங்கள் , அழகுப் பொருள்கள், நுட்பமான தயாரிப்புகள், முதலியவற்றை வாங்குவீர்கள். வீட்டு யோகமும் சிறப்புறும். புதிய வீடு வாங்கும் யோகம் சிலருக்கு வாய்க்கும். சிலருக்கு வசதியான வாடகை வீட்டுக்கு போகமுடியும். வேண்டிய வசதிகள் அமையும்.
குருபகவானின் சுபத் தனமை பெருகி திருமண யோகம் கூடும் . திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கூடிவரும். திருமணமான தம்பதியரிடையே ஒற்றுமை சிறந்து விளங்கும். பிள்ளைகளைப் பற்றிய குறை ,வருத்தம் யாவும் அகலும். குழந்தைப் பேறு உண்டாகும். உங்களைப் பற்றிய பழி பாவங்கள், தப்பான அபிப்பிராயங்கள் வீண்பழி இவை உங்களைவிட்டு விலகிவிடும். பெற்றவர்களுக்கும் , சகோதர சகோதரிகளுக்கும் இதுவரை நீங்கள் செய்யத் தவறிய கடமைகளை இந்த ஆண்டில், சிலர் தூர தேசம் சென்றுகூட பயனடைய முடியும். இப்படியாக குருபகவான் ஆண்டின் தொடக்கத்தில் நற்பலன்களாகக் கொடுப்பார். தொழில் போட்டியாளர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிவார்கள். தொழில், வியாபாரம் மேன்மையடையும். எதிர்பார்த்த லாபம் வரும். கடுமையான உடல்நலப் பாதிப்புகள் இருந்தால் அவை நீங்கிவிடும்.
சிலருக்கு அஜீரணக் கோளாறுகள், வாயுக் கோளாறுகள் ,வயிற்று சம்பந்தமான கோளாறுகள் ஆகியவை ஏற்படும். உங்கள் புகழில் பொறாமையுற்ற நெருங்கிய உறவினர் சிலர் உங்களுக்கு எதிர்ப்பு காட்டக்கூடும். எதிர்பாராத பண வரவு ஏற்படும். தற்காலிக வசதிகளையும் வாய்ப்புகளையும் தேடிககொடுக்கும். சிலருக்கு புதிய தொழில் அமையும். எடுத்த காரியங்கள் செய்யும் முயர்ச்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலையும் அதன் காரணமாக நல்ல பலன்களும் உண்டாகும். இழந்த பொருள் அத்தனையும் மீட்பீர்கள். மங்கலமான நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நிகழும். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள். சிலருக்கு தடைப்பட்ட கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையின் உயர்வுக்கு வழிகாட்டும் காலம் இது.
காத்திருக்கும் சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிலர் பொழுதுபோக்காக மகிழ்ச்சிச் சுற்றுலாவாக வெளிநாடு சென்று வருவார்கள். சிலர் தீர்த்த யாத்திரை சென்று வருவார்க. சிலருக்கு ஞான நிலை சித்திக்கும். சிலர் தியானம், யோகம் இவற்றில் தீவிரமாகி பிரபஞ்ச ரகசியங்களை அறிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபடுவார்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி பொங்கும். கணவன் –மனைவி உறவு சிறக்கும். கருத்துவேறுபாடு மறையும். புதல்வர்கள் கல்வியில் சிறந்து உங்களுக்கு நற்பெயரை பெற்றுத் தருவார்கள். சகோதர சகோதரிகள், விலகிச் சென்ற சொந்தங்கள் அனைவரும் உங்களைத் தேடி வருவார்கள். தொழில், வியாபாரமும் சிறந்து, ஏற்றம் உண்டாகும் குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அகல சில முக்கிய புள்ளிகள் முன்வந்து உதவுவார்கள். வீட்டில் கெட்டி மேளம் முழங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைப்பட்ட சலுகைகள் தானாகவே திரும்பக் கிடைக்கும். இப்படியாக குருபகவானின் சஞ்சாரம் மே மாதம் 26–ம் தேதிவரைதான் சிறப்பாக இருக்கும்.
அதன்பிறகு மே மாதம் 27-ம் தேதி முதல் குரு உங்கள் ராசிக்கு 12-ம் இடத்துக்குப் போவதால், எதைத் தொட்டாலும் விரயமாகவே இருக்கும். இதுவரை கூறப்பட்ட பலன்களுக்கு எதிரிடையான பலன்களாகவே நடக்கும். குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்களுடைய ஊக்கம் குறையும். அலுப்பும் சலிப்புமே அதிகரிக்கும். ஊட்டம் குறைந்து உடல் பலவீனமாகும். உடல்நலத்தில் சின்ன சின்னக் குறைகள் தோன்றும். ஈரல்கோளாறுகளும் செரிமானக் கோளாறுகளும் ஏற்படும். சர்க்கரை வியாதி, கொலாஸ்ட்ரல்முதலிய வியாதிகள் வரும். சிகிச்சையின்மூலம் பணம் கரையும். வேலை நெருக்கடிகளையும் அலைக்கழிப்புகளையும் சந்திப்பதால், நேரா நேரத்துக்கு சாப்பிட முடியாமல் போகும். கடினமான உழைப்பால் உடம்பில் உளைச்சல் உண்டாவது சகஜம் என்றாகிவிடும். பணம் ஏராளமாக செலவாகும். பணம் ஒன்றுக்கு இரண்டாக செலவழியும். வழக்கமான செலவுகளே வரம்பு மீறிவிடும். புதிய செலவினங்களும் கிளம்பி வாட்டி வதைக்கும். குடும்பசெலவுகள், பிள்ளைகளுக்கான பலவித செலவுகள், உறவினர் வகையில் விஷேஷங்களுக்கான செலவுகள் என்று சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். வரவேண்டிய பணம் சரியான சமயத்தில் கைக்கு வராததால், ஏகப்பட்ட நெருக்கடிகளில் சிக்கி அவஸ்தைக்குள்ளாவீர்கள். உங்கள் மதிப்பு மரியாதை குறையும் அளவுக்குப் போய்விடும். சொந்த பந்தங்களின் சுபகாரிய சீர்வரிசைக்கெல்லாம் செலவு செய்யவேண்டி நேர்வதால் திணறுவீர்கள். பொன்னாபரணங்களை அடமானம் வைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். வட்டிகட்ட முடியாமல் நகைகளை விற்கும் நிலை ஏற்படும். கூடிவந்த திருமணம்கூட தடைப்படும். தம்பதியர் ஒற்றுமை குறையும். படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பிள்ளைகளால் சஞ்சலம் உண்டாகும். தூர தேசங்களில் பிள்ளைகளைப் பிரிந்திருக்க நேரும்.
கேது உங்கள் ராசிக்கு 10மிடத்திலும் ,சனிபகவானும் ,ராகு பகவானும் உங்கள் ராசிக்கு 4-மிடத்திலும் சஞ்சரிப்பதால் இந்த மூன்று கிரகங்களால் நற்பலன்கள் ஏற்பட வழியில்லை. சற்றேறக்குறைய மேலே குறிப்பிட்டதைப் போன்று குருவின் 12-மிட சஞ்சார பலன்களைப்போன்ற தீய பலன்களே நிகழும். நிம்மதி இருக்காது. புகழ் மங்கும். பணப்பற்றாக்குறை ஏற்படும். திருமணத் தடை, பிள்ளைகள் பிரச்சினை, பணியிடத்தில் அவமானம் வியாபார நஷ்டம் என்று தொல்லைகள் பல இருக்கும்.
குருவின் 12-மிட சஞ்சாரத்தால் நீங்கள் பலவிதத்தில் சிரமப்பட நேர்ந்தாலும் சில நன்மைகளையும் அடைவீர்கள். 12-மிடத்தில் சஞ்சரிக்கும் குருபகவானின் அருள் நிறைந்த பார்வைர்களில் ஒரு பார்வை உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் விழுகிறது. இதனால் க்ல்வி மேம்படும். வித்தைகள் விருத்தியாகும். தாயாருக்கு உடல்நலம் சிறக்கும். இடம்,குடியிருப்பு, மனை, வீடு, தோட்டம், இதர சொத்துக்கள் ஆகியவற்றை பெருக்கிக்கொள்ள முடியும். குருபகவானின் மற்ற பார்வைகள் 6 மற்றும் 8 ஆகிய இடங்களைப் பார்ப்பதால், வியாதிகள் மட்டுப்படும். கடன், நோய்கள் குறையும். வழக்கு, விவகாரங்களை எதிர்கொண்டு வெற்றிகொள்ள முடியும். எனவே ஒரேயடியாக துவண்டுபோகவேண்டிய அவசியமில்லை. அவ்வப்போது குருவின் சுபப் பார்வை ஒளி வீசும்.
ஆண்டின் இறுதியில் இரண்டு மாதங்களுக்கு அதாவது 8.11.2013 முதல் ஆண்டின் இறுதிவரை வக்கிர சஞ்சாரம் செய்யும் குரு உங்களுக்கு மிகுதியான நற்பலன்களை வாரி வழங்குவார். விட்டதை இரு மடங்காகப் பிடித்திடலாம். இதுவரை தடைப்பட்ட சுபகாரியங்கள் அனைத்தும் இப்போது உடனுக்குடன் நடந்தேறிவிடும். வியாபாரத்தில் நிலவிய மந்தமான சூழ்நிலை மாறி வருமானம் பெருகும். உடல்நலத்தில் எவ்வித தொல்லையும் இல்லாமல் நல்ல ஆரோக்கியமாகவே இருக்கும். இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி தொட்டது துலங்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து நல்ல தகவல்களும் மகிழ்ச்சியான செய்திகளும் வந்தடையும். உங்களுடைய நீண்ட நாளைய கனவு இப்போது நிறைவேறப் போகுது. சிலர் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வர். சிலருக்கு கூட்டுத் தொழில் சிறந்து விளங்கும். கூட்டாளிகளின் ஒற்றுமையில் வியாபாரம் மேம்படும். சிலர் புதிய முடயற்சியில் இறங்கி வெற்றியடைவார்கள். புதிய வண்டி வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்டவோ வீடு வாங்கவோ யோகம் உண்டாகும். பழைய கடன்கள் முழுவதுமாக அடைபடும். அரசாங்கத்திலிருந்து ஆகவேண்டிய காரியங்கள் உடனுக்குடன் நடைபெறும். அரசாங்க சலுகைகள் நினைத்தபடி கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கும் இது யோகமான காலம். கோர்ட் வழக்குகளில் வெற்றி நிச்சயம். இந்த சமயத்தில் புதிய பட்டம் பதவி உங்களைத் தேடிவரும். நீங்க வச்சதுதான் சட்டம் என்று நிலைமை மாறிப்போகும். யாராலும் உங்களை எதுவும் செயய் முடியாது. துணிஞ்சு இறங்கி வெற்றி காண்பீர்கள். இப்படிப்பட்ட யோகமான பலன்களுடன் இந்த ஆண்டு சுபமாக முடிவடையும்.
பரிகாரம்:
மே மாதம் 27-ம் தேதிக்குப் பிறகு குருவின் சஞ்சாரம் சரியில்லை என்பதால், வியாழக் கிழமைகளில் தட்சிணாமுர்த்தியை ஆலயம் சென்று வழிபட்டு, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சித்து கொண்டக்கடலை மாலையிட்டு வணங்கவும். அர்த்தாஷ்டம சனியின் சஞ்சாரத்தால் விளையக்கூடிய துயரங்களைப் போக்க சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி வழிபடவும். தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். கறுப்பு நிறப் பொருள்களை தானம் செய்யவும். வயதானவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும் உபகாரம் செய்யவும். கேதுவின் சஞ்சாரமும் சரியில்லையாதலால், வினாயகரை வழிபடவும்.வினாயகர் கோவிலை சுத்தம் செய்யவும். ராகுவின் சஞ்சாரமும் சரியில்லையாதலால், வெள்ளிக்கிழமைகளில் எலுமிச்சை விளக்கேற்றி துர்கையம்மனை வழிபடவும். துன்பங்கள் ஓடிப்போகும்.
0 comments:
Post a Comment