மிதுன ராசி 2013 | மிதுனம் ராசி ஆண்டு பலன் 2013 | புத்தாண்டு பலன்


மிதுன  ராசி:

மிருகசிரீஷம் (3&4); திருவாதிரை மற்றும் புனர்பூசம் ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது:


இந்த 2013-ம் ஆண்டு தொடக்கத்தில், ஆண்டுகோளான குருபகவான் உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரிதத்தபடி இருக்கிறார். இந்த ஆண்டு  மே மாதம் 27-ம் தேதியன்று வரப்போகும் குரு பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். விரய ஸ்தான சஞ்சாரத்தின்போது நிறைய பொருள் நஷ்டங்களை சந்தித்திருப்பீர்கள்.  மே மாதம் வரப் போகும் ஜென்ம ராசியின் சஞ்சாரத்தின் போதும் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை என்று சொல்வ்துபோலத்தான் இருக்கும். இனி ராகு- கேது சஞ்சாரங்களைப் பார்த்தோமானால், ராகு உங்கள் ராசிக்கு 5-மிடத்திலும், கேது உங்கள் ஜென்ம ராசிக்கு 11-ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். சனி பகவானும் உங்கள் ராசிக்கு   5-மிடத்தில் சஞ்சரிக்கிறார். இனி பலன்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

12-மிடத்தில் சஞ்சரிக்கும் குரு ஊக்கத்தைக் குறைக்கும். அடிக்கடி அலுப்பும் சலிப்புமாக இருக்கும். உடல்பலம் குறைந்து பலவீனமாயிருக்கும். உடல்நலத்தில் சின்னச் சின்ன குறைகள் தென்படும். சிலருக்கு ஈரல்கோளாறுகளும் செரிமானக் கோளாறுகளும் இருக்கும். குரு சர்க்கரை வியாதிக்குட்பட்ட கிரகம் என்பதால், கவனப் பிசகாக இருந்துவிட்டால், டயபெடிக் லெவலுக்கு கொண்டுவிடும். கொலாஸ்ட்ரல்  சம்பந்தமான தாக்கமும் ஏற்படும். .

இனி குருவின் ஜென்ம சஞ்சாரமும் பெரிய வித்தியாசத்திக் காட்டப் போவதில்லை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் நடை,உடை, பாவனைகளில் ஒருவித தளர்ச்சி தெரியும். விரக்தியும் சோர்வும் சலிப்பும் உங்களிடம் சொந்தம் கொண்டாடும். அடிக்கடி உங்கள் மனம் துவண்டுபோகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. “ஒருமாதிரியாயிருக்கு அசத்துது; கிறுகிறுப்பாயிருக்கு ” என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பீர்கள். பித்தமயக்கம், தலைச் சுற்றல்  என்றபடி அசௌகரியங்கள் மேலோங்கியிருக்கும்.

ஜென்ம குருவும் பொருளாதார வசதியைக் கொடுப்பார் என்று சொல்லமுடியாது. வரவேண்டிய பணம் தடைப்படும். வந்து சேர்வதும் அரையும் குறையுமாக வரும். ஏற்கெனவே வாங்கிய கடனுக்கு வட்டி, தவணை என்று வருமானத்தில் பெரும்பகுதி கடனுக்கே போய் வவிடும். பற்றாக்குறைப் பிரச்சினை அவ்வப்போது ஏற்படுவதும் சமாளித்து சரிக்கட்டுவதும், வழக்கமான பிரச்சினையாகிவிடும். இதுமட்டுமல்லாமல் பணத்தை முன்னிட்ட கருத்துவேறுபாடுகள், மனஸ்தாபங்கள் என்று ஒன்று மாற்றி ஒன்று படுத்தும். வீண் தகறாறும் அவப்பெயரும் ஏற்படும்.

ஜென்ம குரு சுப காரியங்களையும் நடக்கவிடாது. காரணம் ,சட்டுப்புட்டென்று, பணம் புரட்ட முடியாது. தகுந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது.  எனவே திருமணங்கள் நிறைவேறாது.   ஏற்கெனவே கல்யாணமான தம்பதியரிடையே அடிக்கடி பிரச்சினை இருந்தவண்ணம் இருக்கும். மேலும் அலுப்பு, சலிப்பு, அலைக்கழிப்பு என்று தம்பதியரிடையே இணக்கம் குறையும். பிள்ளைகளைப்பற்றிய பொறுப்பும் கவலையளிக்கும்.

அதுபோலவே சனி பகவானும்  ராகுவும் உங்கள் ராசிக்கு  5-மிடத்தில் சஞ்சரிப்பதும்  நல்லதல்ல. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அதுவும் அவர்கள் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களது உதவிகள் உங்களுக்கு அவ்வப்போது கிடைக்கும். சிலர் அவர்களுடன் சேர்ந்து கூட்டுத் தொழில் தொடங்குவார்கள். ஆனால் இந்த இடத்தில் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. வியாபாரத்தையும் நட்பையும் சேர்த்து குழப்பிக்கொள்ளாமல், இரண்டையும் பிரித்துப்பார்க்கத் தெரியாமல் இரண்டையுமே  சிலர் கெடுத்துக்கொள்வார்கள். சிலர் தங்கள் தொழிலை மாற்றிக்கொள்வார்கள். சிலர் இடம்விட்டு இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் அக்கறை தேவை. அவருடைய உடல்நலத்தில் ரத்தம் சம்பந்தமான வியாதிகள், மற்றும் விஷம் சம்பந்தமான வியாதிகளும் ஏற்படும். சிலர் ஒழுக்கக் குறைவான பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு உடல்நலத்தையும் ,கௌரவத்தையும் மரியாதையையும் கெடுத்துக்கொள்வர்.  தொழில், வியாபாரத்தில் தடை ஏற்படும். மாணவர்கள் இந்தக் காலகட்டத்தில் அதிகமாக கடின உழப்பை மேற்கொள்ளவேண்டியிருக்கும். நீங்கள் என்னதான், படிப்பில் புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் திறமைகள் எல்லாம் இப்போது உங்களுக்கு பயன்படாமல் போகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடங்கல்கள் வரும். தொழிலாளர்கள் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும்.மின்சாரம், நெருப்பு, விஷம், ஆயுதம் இவற்றில் ஈடுபட்ட தொழில் செய்பவர்களுக்கு எச்சரிக்கை அவசியம்.

சனியின் 5-ம் இடத்து சஞ்சாரமும் சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. இப்படியாக உள்ள நேரத்தில் குருபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார்.இதனையும் சாதகமாகக் கொள்ள முடியாது என்றாலும், குருவின் பார்வைகளின் மூலம் உங்களுக்கு சில நன்மைகள் கிடைக்கும்.  கேதுவின் சஞ்சாரத்தாலும் நற்பலன்கள் கிடைக்கும். உங்கள் மனதில் இருந்த உளைச்சல் கொஞ்சம் நீங்கும். ஓரளவுக்கு சுகங்களும் சந்தோஷங்களும் வந்து சேரும்.பணப்புழக்கமும் சீராகும். உங்கள் மதிப்பு, மரியாதை நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கடந்த காலத்தைவிட சிறப்பாக இருக்கும். வீட்டுக்குத் தேவையான வசதிகள் கிடைக்கும். விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். அவ்வப்போது மனக் கசப்பு வரத்தான் செய்யும். ஆனால், அவை உங்கள் அணுகுமுறையால் விலகிவிடும். தடைப்பட்டுவந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள்  சற்று முயன்றால்  கைகூடும். குழந்தை பாக்கியமும் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சுபச் செலவுகளுக்காக கடன் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் படிப்படியாக அதிகரிக்கும். வேலைப்பளு இருக்கத்தான் செய்யும். ஆனாலும் அதற்குண்டான வருமானமும் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள்.  சற்று முயற்சி செய்தால் உங்கள் கோரிக்கைகள் மேலிடத்தால் நிறைவேற்றி வைக்கப்படும். ஆனால் இடமாற்றத்தை தவிர்க்க முடியாது. வியாபாரிகள் தொடர்ந்து சீரான வருமானத்தைக் காணலாம். லாபம் குறையாது. அதிக அலைச்சலும் அல்லலும் பட்டுத்தான் ஆக வேண்டும். ஊர் விட்டு ஊர் செல்லும்  நிலை உருவாகும். அரசின் உதவிகள் அவ்வளவு எளிதாகக் கிடைக்காது. ஆனால் முய்ற்சித்தால் கிடைக்கும். எதிரிகள் இடையூறு அவ்வப்போது தலை தூக்கினாலும் அதை எளிதில் முடிப்பீர்கள். பொருள் விரயம் ஏற்படலாம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். ஆனால் பணப் புழக்கத்துக்கு குறைவிருக்காது. அரசியல்வாதிகள் பொது நல சேவையில் சீரான நிலையில் இருப்பர். ஆனால் எதிர்பார்த்த பதவிகள் கிடைக்காது. விவசாயிகள் உழைப்புக்கேற்ற வருமானத்தைக் காணலாம். மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்துப் படித்தால் மட்டுமே தேர்ச்சி அடைய முடியும். பெண்கள் புத்தாடை ,அணிகலன்கள் வாங்கலாம். உடல்நலம் சிறப்படையும்.

இப்படியாக , குருவின் பார்வைகளும் , கேதுவின் சஞ்சாரமும் சாதகமான நற்பலன்களை உங்களுக்குக் கொடுக்கும். சனி மற்றும் ராகுவினால் ஏற்படக்கூடிய தீய பலன்களையும் குறைக்க வல்லது. எனவே இந்தப் புத்தாண்டு உங்களுக்கு நல்லதும் கெட்டதும் கலந்ததாக  அமையும்.

பரிகாரம்:

உங்களுடைய ராசிக்கு ராகுவின் ஐந்தாமிடத்து சஞ்சாரம் சரியில்லை என்பதால், துர்க்கையம்மனை வழிபடவும். கருப்பு உளுந்தை தானம் செய்யவும். குருவின் சஞ்சாரமும் சரியிலலை என்பதால், தட்சிணாமூர்த்தி கோவிலுக்குச் சென்று மஞ்சள் ஆடை  சாத்தி கொண்டக்கடலை மாலையிட்டு வழிபடவும்.  சனியின் சஞ்சாரமும் சரியில்லை என்பதால், சனிக்கிழமைகளில்  சனீஸ்வரன் கோவிலுக்குச் சென்று எள்ளு தீபம் ஏற்றி வழிபடவும்.  கருப்பு நிறப் பொருள்களை வயதானவர்களுக்கும் உடல் ஊனமுற்றொருக்கும் தானம் செய்யவும்.

சனிபகவானின் யோக சஞ்சாரத்தால், இந்தப் புத்தாண்டு நலம் தரும் நல்லாண்டாக சிறக்கும். வாழ்க பல்லாண்டு. நலமளிக்கும் புத்தாண்டு!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment