மே மாத ஜோதிடம் : 2, 11, 20, 29

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் செல்வாக்கு கூடும். பணவரவு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். குழந்தை பாக்‌கியம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். 

பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மதிப்பார்கள். விலை உயர்ந்த ஆடியே, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். அவ்வப்போது வாகனச் செலவு, மனஉளைச்சல் வந்துப் போகும். 


நெருக்கமான நண்பர் உங்களைத் தவறாகப் புரிந்துக் கொள்வார். ஆனால் சகோதர வகையில் பயனடைவீர்கள். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! முடிவுகளெடுப்பதில் இருந்த தடுமாற்றம் நீங்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த தோழியை சந்திப்பீர்கள். 

வியாபாரத்தில் புதுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்‌தியோகத்தில் அடுக்கடுக்கான வேலைகளால் மனஇறுக்கம் அதிகரிக்கும். கலைத்துறையினர்களே! உங்களின் கலைத்திறன் வளரும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் மாதமிது. 

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 2, 7, 16, 11, 25
அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 6
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தாபச்சை, ரோஸ்
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : வியாழன், சனி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment