பி‌ப்ரவ‌‌ரி மாத எண் ஜோதிடம் : 7, 16, 25

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் உங்கள் செயலில் வேகம் கூடும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். 

சொந்த-பந்தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பால்ய நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். உடன்பிறந்தவர்கள் மனம் விட்டு பேசுவார்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டு. பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். 

அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. வேலையாட்கள் உங்களின் பரந்த மனதைப் புரிந்துக் கொள்வார்கள். 

உத்‌தியோகத்தில் அதிகாரிகள் உங்களை நம்பி புது பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சம்பளப் பிரச்சனை தீர்வுக்கு வரும். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் நட்பை பெறுவீர்கள். எதையும் சாதிக்க முயலும் மாதமிது. 

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 4, 5, 12, 15, 21, 25
அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 7
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பழுப்பு
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, சனி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment