பி‌ப்ரவ‌‌ரி மாத ஜோதிடம் : 6, 15, 24


6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணவரவு உண்டு. வீடு, வாகன வசதிப் பெருகும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்துக் கொள்வார்கள்.

புதிய அணுகுமுறையால் சொத்துப் பிரச்னை தீரும். அவ்வப்போது மன உளைச்சல், விரக்தி, வீண் பகை வரக்கூடும். உடன்பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வழக்கு சாதகமாகும். அரசு காரியங்கள் உடனே முடியும். 

உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும். வெளிநாடு, வேற்று மாநிலத்தில் இருப்பவர்கள் உதவுவார்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணர்வீர்கள். ஆலயங்களை புதுப்பிக்க உதவுவீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். 

கடையை விரிவுப்படுத்திக் கட்ட முடிவெடுப்பீர்கள். உத்‌தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். கலைத்துறையினர்களே! பொது விழாக்களுக்கு தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். சாமர்த்தியமாக காய்நகர்த்த வேண்டிய மாதமிது. 

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 6, 9, 17, 24, 28, 29
அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 5
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, மயில்நீலம்
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், வெள்ளி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment