பி‌ப்ரவ‌‌ரி மாத ஜோதிடம் : 4, 13, 22, 31

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் அதிரடியான முன்னேற்றங்களை காண்பீர்கள். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். 

வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவுவார்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். தாய்வழி உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். நட்பால் ஆதாயம் உண்டு. 

அரசாங்க வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். அண்டை-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். அவ்வப்போது வீண் வாக்குவாதம், மனஇறுக்கம், கவலைகள் வந்துச் செல்லும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். 

வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்‌தியோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சம்பளப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் அன்பை பெறுவீர்கள். கலைத்துறையினர்களே! புது வாய்ப்புகள் தேடி வரும். புதுத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும் மாதமிது. 

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 4, 8, 10, 14, 18, 24
அதி‌ர்ஷ்ட எண்கள் : 7, 8
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : கிரே, ஆலிவ்பச்சை
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, வியாழன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment