பி‌ப்ரவ‌‌ரி மாத ஜோதிடம் : 3, 12, 21, 30

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு வேண்டாம். 

பழுதாகிக் கிடந்த மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். குழந்தை பாக்யம் உண்டாகும். கல்யாணப் பேச்சு வார்த்தை முன்னேற்றம் தரும். தூரத்து உறவினர்களை சந்திப்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 

அவ்வப்போது பழைய கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். ஆரோக்யத்தில் அதிக அக்கறை காட்டுங்கள். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள். வேலையாட்களிடம் தொழில் சம்பந்தமான ரகசியங்களை வெளியிட வேண்டாம். 

பங்குதாரர்களிடையே காரசாரமான விவாதங்களை தவிர்க்கவும். உத்‌தியோகத்தில் மகிழ்ச்சி தங்கும். புது அதிகாரி உங்களை மதிப்பார். கலைத்துறையினர்களே! உங்களின் கலைத்திறன் வளரும். அறிவுப் பூர்வமாக செயல்பட வேண்டிய மாதமிது. 

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 3, 6, 9, 11, 17, 23, 27
அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 5
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : இளம்சிவப்பு, வெள்ளை
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : புதன், சனி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment