பி‌ப்ரவ‌‌ரி மாத ஜோதிடம் : 2, 11, 20, 29

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எதிலும் மகிழ்ச்சி கிட்டும். பணப்பற்றாக்கு நிலை மாறும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

பதவி, புகழ் தேடி வரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். அவ்வப்போது கொஞ்சம் அலட்சியம், சோம்பல், முன்கோபம், வீண் டென்ஷன் வந்து நீங்கும். தாய்வழி உறவினர்களிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, மனை வாங்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.

வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வயிற்று வலி, மூச்சுப் பிடிப்பு விலகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு லாபத்தை பெருக்குவீர்கள். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.

புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்‌தியோகத்தில் உயரதிகாரி உங்களுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் தருவார்கள். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கலைத்துறையினர்களே! பெரிய நிறுவனங்களிடமிருந்து அழைப்பு வரும். புதிய கண்ணோட்டத்தி பயணிக்கு மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 4, 8, 12, 16, 22, 25
அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 8
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : நீலம், பிஸ்தா பச்சை
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், வெள்ளி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment