ஜூன் மாத ராசி பலன்கள் - கடகம்

வாழ்க்கையில் எதையும் நன்கு அனுபவித்து ரசிப்பீர்கள். இந்த மாதம் உங்களுக்கு எல்லா கஷ்டங்களும் நீங்கி நிம்மதி பெறுவீர்கள். எதிர்ப்புகள்  அகலும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். குரு
விரய ஸ்தானத்தில் இருந்தாலும் சில நன்மைகளை அளிக்கும் வகையில்  சஞ்சரிக்கிறார். உங்களின் பொருளாதார வலிமை கூடும். அதே வேளையில் பொருட்களின் மீது கவனமும் தேவை. இழப்பு ஏற்படலாம். வாழ்க்கையில்  பொன்னான வாய்ப்புகள் தேடிவரும். வாழ்க்கை வளம் பெறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும்.

கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆனாலும் வாக்கு ஸ்தானத்தை ராகு பார்ப்பதால் வாக்குவாதங்கள் ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக்  கொடுத்துப் போவது நல்லது. உறவினர் வகையிலும்கூட மனஸ்தாபம் உருவாகலாம்.  சிலருக்கு தூரத்திலிருந்து விரும்பத்தகாத செய்திகள் வரலாம்.  தீவிர முயற்சிகளின் பேரில் சிலருக்கு சுபமான நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உங்கள்  பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும்.

தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடலாம். கூட்டு வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எதிலும் முதலீடு  செய்வதற்கு முன் குடும்பத்தினருடன் ஆலோசியுங்கள். கலைத்துறையினருக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள்  திறமைக்கேற்ற புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள்  அதிக சிரத்தை எடுத்துப் படிப்பது நல்லது.

பரிகாரம்: திங்கட்கிழமைதோறும் அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் 11 முறை கூறவும்.

சிறப்பு பரிகாரம்: பச்சரிசியில் கஞ்சி வைத்து திங்கட்கிழமைகளில் அம்மனுக்குப் படைத்து அனைவருக்கும் வழங்கவும்.

சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29 ஆகிய தேதிகளில் புது ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: சந்திரன், செவ்வாய்; தேய்பிறை: சுக்கிரன், சனி.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், செவ்வாய்; தேய்பிறை: வெள்ளி, சனி..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment