சிறந்த சிந்தனைவாதி நீங்கள். குரு பகவான் 28.5.13 முதல் 12.6.14 வரை உங்களின் 10-ஆம் வீட்டில் அமர்கிறார். உத்தியோகம், பதவி, கௌரவத்துக்கு பங்கம் வருமே
என்று கலங்கவேண்டாம். ஓரளவு நன்மையே உண்டாகும். வி.ஐ.பி-கள் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை அமையும். சில தருணங்களில், வேலைகளை முடிக்க முடியாமல் மன இறுக்கத்துக்கு ஆளாவீர்கள். குரு உங்கள்
ராசிக்கு 2-ஆம் வீட்டைப் பார்ப்பதால், சாதுரியமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். மழலை பாக்கியம் கிடைக்கும். கடனாகக் கொடுத்து ஏமாந்த பணம் வசூலாகும்.
குரு 7-ஆம் பார்வையால் சுக வீட்டைப் பார்ப்பதால்
தாயாருடனான மோதல்கள் விலகும். அவரது உடல்நலன் சீராகும். வீடு-வாகனம்
வாங்குவதற்கு வங்கிக் கடன் கிடைக்கும். குரு 9-ஆம் பார்வையால் 6-ஆம்
வீட்டைப் பார்ப்பதால், வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பழைய கடன்
பிரச்னைகளில் ஒன்று தீரும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். அரசால்
ஆதாயம் அடைவீர்கள். மகனுக்கு, நல்ல பெண் அமைவாள்.
குருபகவானின் சஞ்சாரம்:
28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் திருதியாதி பதியும்-அஷ்டமாதிபதியுமான
செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால் முன்கோபம், திடீர்
செலவு, சொத்துப் பிரச்னை, சகோதர வகையில் வருத்தம் வந்து செல்லும்.
எவரையும் எவரிடமும் சிபாரிசு செய்ய வேண்டாம். வாகனத்தை இயக்கும் போது
கவனம் தேவை. ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால், தெளிவாக முடிவெடுக்க
முடியாமல் குழம்புவீர்கள்.பூர்வீகச் சொத்தை விற்க நேரிடும். கர்ப்பிணிகள்
பயணங்களைத் தவிர்க்கவும்.
29.8.13 முதல் 26.1.14 வரை; 13.4.14 முதல் 12.6.14 வரை
உங்களின் சுக-சப்தமாதிபதியான குரு, தனது நட்சத்திரமான புனர்பூசத்தில்
செல்கிறார். தம்பதிக்கு இடையே மனஸ்தாபம் வந்துபோகும். தாயாருடன்
மனத்தாங்கல் வரும். அவருக்கு மருத்துவச் செலவுகள்
வந்துபோகும்.
குரு பகவான் 13.11.13 முதல் 26.1.14 வரை புனர்பூச
நட்சத்திரத்திலும், 27.1.14 முதல் 11.3.14 வரை திருவாதிரை
நட்சத்திரத்திலும் வக்ரகதியில் செல்கிறார். பண வரவு, சொத்துச் சேர்க்கை
உண்டு. சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஷேர் மூலம் பணம் வரும். புது
வேலை கிடைக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து முக்கிய முடிவுகள்
எடுப்பீர்கள்.
வியாபாரத்தில் பெரிய முதலீடுகளோ, பெரிய அளவில்
எவருக்கும் கடன் தரவோ வேண்டாம். அனுபவமிக்க வேலையாட்கள் திடீரென பணியை
விட்டு விலகுவர். புதியவர்களை நம்பி புதிய தொழிலில் இறங்க வேண்டாம்.
பங்குதாரர்கள் ஏடாகூடமாகப் பேசுவர். ஏற்றுமதி, இறக்குமதி, பெட்ரோ
கெமிக்கல் வகைகளால் லாபம் உண்டு.
உத்தியோகத்தில், உங்கள் உழைப்பை பயன்படுத்தி வேறு
சிலர் முன்னேறுவர். உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில்
சிறியவர்களிடம் எல்லாம் நீங்கள் அடங்கிப்போக வேண்டிய சூழல் உருவாகும்.
மேலதிகாரிகளுடன் பணிந்து போங்கள். எதிர்பார்த்த இடமாற்றம், சம்பளம் சற்று
தாமதமாகக் கிடைக்கும்.
கன்னிப்பெண்களுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத் தில்
இடம் கிடைக்கும். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். பெற்றோரைப் பகைக்க
வேண்டாம். வெளி நாட்டில் வேலை, மேற்கல்வி அமையும்.
மாணவர்களுக்கு, கணிதம் அறிவியல் பாடங்களில் அதீத கவனம்
தேவை. அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகும். கட்சி மேலிடம்
உங்களை உற்றுக் கவனிக்கும். கலைத் துறையினர், யதார்த்தப் படைப்புகளால்
புகழ் பெறலாம்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, பணத்தின் அருமையையும் பொறுமையின் அவசியத்தையும் உங்களுக்கு உணர்த்துவதாக அமையும்.
பரிகாரம்: கும்பகோணம்
அருகிலுள்ள திருக்கொள்ளம்புதூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவில்வ வனநாதரையும்,
ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் சனிக்கிழமையில் சென்று தரிசியுங்கள்.
முயற்சிகள் பலிதமாகும்.
2 comments:
GURU PALAN THELIVAHA ULATHUMNUNRY
CANADAVIL ORU KOVILIL GURU MATRATHAI 26.05.13 SUNDAY ENRU PARIKARAM SEIKIRARGAL ITHU SARIYA?
Post a Comment