உண்மையை நேசிப்பவர் நீங்கள். குரு பகவான் 28.5.13 முதல் 12.6.14 வரை உங்களின் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் அமர்கிறார். இனி, தொலைநோக்கு சிந்தனையால்
எதையும் சாதிப்பீர்கள். தாழ்வுமனப்பான்மை விலகும். பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். திடீர் செல்வாக்கும், வசதி-வாய்ப்புகளும் கூடும்.
குரு 5-ஆம் பார்வையால் உங்கள் ராசியை பார்ப்பதால்
புதியத் திட்டங்கள் நிறைவேறும். சேமிக்கத் தொடங்குவீர்கள். தம்பதிக்குள் பிணக்குகள் நீங்கும்; இருவரும் மனம் ஒருமித்து முடிவெடுப்பீர்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். பூர்வீகச்
சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள்.
வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.
சகோதரர்கள் உங்களைப் புரிந்துகொள்வர். குரு 3-ஆம் வீட்டைப் பார்ப்பதால்,
எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். குறைந்த வட்டிக்கு கடன்
பெற்று, அதிக வட்டிக்கடனை அடைப்பீர்கள். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள்
கூடி வரும். வீடு வாங்கும் ஆசை நிறைவேறும்.
குருபகவானின் சஞ்சாரம்:
28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் தன-சப்தமாதி பதியான செவ்வாயின்
மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு
வரும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். வழக்கு சாதகமாகும்.
பதவிகள் தேடி வரும். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். மனைவியுடன்
ஈகோ பிரச்னை வரக்கூடும். அவருக்கு கர்ப்பப்பை கட்டி, ஹார்மோன் கோளாறு
வந்து செல்லும். சொத்து விவகாரத்தில் அலட்சியம் வேண்டாம்.
26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால் நெஞ்சு எரிச்சல்,
வாயுக் கோளாறு, தலை சுற்றல், சிறுநீர் பாதையில் அலர்ஜி வந்துசெல்லும்.
தம்பதிக்குள் அனுசரித்துப் போகவும்.
29.8.13 முதல் 26.1.14; 13.4.14 முதல் 12.6.14 வரை
உங்களின் திருதியாதிபதியும்-சஷ்டமாதிபதியுமான குரு, தனது நட்சத்திரமான
புனர்பூசத்தில் செல்வதால் இனம்தெரியாத கவலைகள் வந்து செல்லும். முக்கிய
கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். செல்வாக்கு கூடும். சொத்து
சேரும்.
13.11.13 முதல் 26.1.14 வரை குரு புனர்பூசம்
நட்சத்திரத்திலும், 27.1.14 முதல் 11.3.14 வரை திரு வாதிரையிலும் வக்ர
கதியில் செல்வதால், குடும்பத்தில் சலசலப்புகள் வந்து செல்லும். வேலைகள்,
திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.
கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.
வியாபாரத்தில், வேலையாட்களின் ஒத்துழைப்பு
அதிகரிக்கும். சந்தை ரகசியங்களை தெரிந்துகொள்வீர்கள். கடையை
நவீனமாக்குவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் புது ஆடர்கள்,
ஏஜென்டுகள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். பங்குதாரர் பணிந்து
வருவார். உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தரக்கூடிய பங்குதாரரும்
அறிமுகமாவார். ரியல் எஸ்டேட், சிமெண்ட், கண்ணாடி வகைகளால் ஆதாயம் உண்டு.
உத்தியோகத்தில், உங்கள் திறமைக்கு அங்கீகாரம்
கிடைக்கும். அதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பர்.
சம்பளம் உயர்வு, சலுகைகள் கிடைக்கும். வெளி நிறுவனங்களில் நல்ல
வாய்ப்புகள் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும்.
கன்னிப்பெண்களுக்கு கல்யாணம் கூடிவரும். புது வேலை
கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் திறமைகளை
வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மாணவ-மாணவியருக்கு உயர்கல்வியில்
வெற்றி உண்டு. விரும்பிய பாடப் பிரிவில் சேர்வார்கள். அரசியல்வாதிகள்
இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவர். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு
நல்ல வரவேற்பு கிடைக்கும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்களுக்கான அங்கீகாரத்தை தருவதுடன், பணம்- பதவியையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: சென்னைக்கு
தெற்கேயுள்ள திருக்கழுக்குன்றத்தில் அருள்பாலிக்கும் வேதகிரீஸ்வரரையும்,
நந்தீஸ்வரரையும் பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். புற்று நோயாளிகளுக்கு
உதவுங்கள். செழிப்பு கூடும்.
1 comments:
ஆய்வு செய்ய பட்ட அருமயான தொகுப்பு
Post a Comment