1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். தள்ளிப் போன வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். புது வேலைக் கிடைக்கும்.
பிள்ளைகளின் கல்யாணம், உயர்கல்வி முயற்சிகள் கூடி வரும். தாய்வழி உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். சகோதரிக்கு திருமணம் முடியும். பழைய நண்பர்கள், உறவனர்களால் ஆதாயம் உண்டு.
கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை வழங்குவீர்கள். பிரபலங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். திடீர் பயணங்களும், செலவுகளும் வந்துப் போகும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளே! மேலிடம் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சம்பளம் உயரும். கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். கலைத்துறையினர்களே! உங்களின் புகழ், கௌரவம் உயரும். சாதித்துக் காட்டும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 1, 4, 8, 9, 11, 28, 29
அதிர்ஷ்ட எண்கள் : 1, 5
அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, கிரே
அதிர்ஷ்ட கிழமைகள் : புதன், வியாழன்
0 comments:
Post a Comment