பி‌ப்ரவ‌‌ரி மாத ஜோதிடம் : 9, 18, 27


9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எதிர்ப்புகள் நீங்கும். இங்கிதமாகப் பேசி கடினமாக காரியங்களையும் சாதிப்பீர்கள். திடீர் பணவரவு உண்டு. குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். மகனுக்கு வேலை கிடைக்கும். மகளுக்கு எதிர்பார்த்த படி வரன் அமையும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். 


அரசால் ஆதாயம் உண்டு. இளைய சகோதரர் உதவுவார். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அவ்வப்போது மனஉளைச்சல், பணப்பற்றாக்குறை, ஏமாற்றம் வந்துச் செல்லும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். 


வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்‌தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடாதீர்கள். கலைத்துறையினர்களே! உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பாராத வெற்றிகளை சந்திக்கும் தருணமிது. 


அதி‌ர்ஷ்ட தேதிகள் : 8, 9, 12, 15, 17, 22
அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 6
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிங்க், வெளிர்நீலம்
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : திங்கள், புதன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment