ஜூலை மாத ராசி பலன்கள் - மகரம்

குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் சஞ்சரிப்பது நல்லதல்ல. அதுபோல 11மிடத்திலுள்ள ராகு பகவான் சில நன்மைகளைச் செய்தாலும்கூட 5மிடத்திலுள்ள கேதுவினால் உங்களுக்கு நன்மை ஏற்பட வாய்ப்பில்லை.
மேலும் சனிபகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் சஞ்சரிப்பதும் நல்லதல்ல. இனி மாதக் கிரகங்களின் சஞ்சாரப்படி இந்த மாதம் உங்களுக்கு சுமாரான மாதமாக இருக்கும். இதுவரை உங்களை வாட்டிவந்த கடன் தொல்லைகள் தீரும். இதுவரை உங்களுக்கு தொல்லை ஏற்படுத்திவந்த எதிரிகளின் தொல்லை இப்போது குறையும். உங்களை வாட்டிவந்த நோய்கள் நீங்கி உடல்நலம் பெறுவீர்கள். தேவையற்ற வம்பு வழக்குகள் தீர்ந்துபோகும். இதுவரை மனதில் இருந்துவந்த துக்கங்களும் தொல்லைகளும் நீங்கிவிடும். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைவார்கள். த்ந்தை மேன்மை அடைவார். அவருக்கு உடல் நலம் பெறும். அவ்வப்போது செய்யும் காரியங்களில் தடைகளும் கால தாமதங்களும் ஏற்பட வாய்ப்புண்டு. தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படலாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகளும் விரோதங்களும் ஏற்படும். புத்திர புத்திரிகளின் போக்கு மனதில் கவலையை ஏற்படுத்தும். பூர்வீகச் சொத்தில் வில்லங்கம், பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலர் தங்கள் பூர்வீகச் சொத்தைப் பிரிக்கவோ அல்லது விற்கவோ வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள். குடும்பத்தாரின் தேவைகளை காலமறிந்து பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம். அதன் காரணமாக குடும்பத்துக்குள் கருத்து வேறுபாடுகள் , சண்டை சச்சரவுகள் ஏற்படும். பெண்களால் அவமானம் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். கணவன்-மனைவி உறவு எதிபார்த்த அளவு இருக்காது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment