எல்லாம் தெரிந்திருந்தும் தனக்கென ஒரு பிரச்னை என்று வந்தால் தடுமாறுபவர்களே! மற்றவர்களை எளிதில் நம்பி ஏமாறுபவர்களே! உங்கள்
ராசிக்கு 12ம் வீட்டில் சூரியன் நுழைந்திருப்பதால் செலவினங்கள் ஒருபக்கம் இருந்து கொண்டேயிருக்கும். ஆனாலும் சுபச் செலவுகளும் அவ்வப்போது உண்டு. உங்களை சுற்றியிருப்பவர்கள், நெருங்கியிருப்பவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டுமென்று நினைத்தீர்களே! அவர்களுக்கெல்லாம் விலை உயர்ந்த பொருள் வாங்கித் தருவது, அல்லது அவர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவது என்று பல காரியங்களையும் இந்த மாதத்தில் நீங்கள் செய்வீர்கள்.
திடீர் பயணங்களால் சோர்வும், களைப்பும் அதிகரிக்கும். முடிந்தவரை தூக்கத்தைக் கெடுக்கும் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. 1ந் தேதி வரை செவ்வாய் 12ல் நிற்பதால் தலைச்சுற்றல் வரும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அவ்வப்போது பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து குழம்புவீர்கள். மார்ச் 2ந் தேதி முதல் செவ்வாய் ராசிக்குள் நுழைவதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். அஷ்ட மத்துச்சனி நடைபெறுவதால் கோபப்படாதீர்கள். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களைப் பற்றிய விமர்சனங்கள் வேண்டாம்.
சிலர் உங்கள் பெயரை தவறாகப் பயன்படுத்தக் கூடும். 8ம் வீட்டிலேயே ராகுவும் தொடர்வதால் சிலரின் ஆசை வார்த்தைகளில் ஏமார்ந்து விடாதீர்கள். யாரை யும், யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். புதன் 12ல் நிற்பதால் நண்பர்களால் அன்புத் தொல்லை அதிகரிக்கும். அவர்களுடன் கருத்து மோதல் களும் வரக்கூடும். மனைவிமீது கோபப்படாதீர்கள். சுக்கிரன் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் பிரச்னைகளை எதிர்கொண்டு சமாளிக்கும் சக்தி உண்டாகும். 2ல் கேது நீடிப்பதால் குடும்பத்தில் இருக்கும் நிறை, குறைகளை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். குரு மறைந்து கிடப்பதால் திறமை இருந்தும், கடினமாக உழைத்தும் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டேயிருப்பீர்கள்.
அரசியல்வாதிகளே! சகாக்களைப்பற்றி குறை கூறிக் கொண்டிருக்காதீர்கள்.
கன்னிப்பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளியிருங்கள். தாயாருடன் விவாதங்கள் வேண்டாம்.
மாணவர்களே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது. அதற்கான உழைப்பும் வேண்டும். அன்றைய பாடங்களை அன்றே படியுங்கள்.
வியாபாரம் சுமாராக இருக்கும். புள்ளி விவரங்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம்.
உத்யோகத்தில் சின்னச் சின்ன போராட்டங்கள் இ ருக்கும். சிறுசிறு அவமானங்களையும் சந்திக்க வேண்டி வரும். பொறுமை காப்பது நல்லது. அதிகாரிகளையும் அனுசரித்துப் போங்கள். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்து செல்லும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன் படித்துப் பாருங்கள்.
கலைத்துறையினரே! சிலர் உங்களின் மூளையைப் பயன்படுத்தி முன்னேறுவார்கள்.
விவசாயிகளே! நவீனரக விதைகளை பயன்படுத்தி விளைச்சலை அதிகப்படுத்தப் பாருங்கள். ஆன்மிகம், விழாக்களில் ஆர்வம் காட்டும் மாதமிது.
ராசியான தேதிகள்:
பிப்ரவரி 15, 16, 19, 22, 23, 24, 25, 26, 28 மார்ச் 6, 7, 8, 9
சந்திராஷ்டம தினங்கள்:
மார்ச் 1ந் தேதி மதியம் 1.30 மணி முதல் 2 மற்றும் 3ந் தேதி மாலை 4.30 மணி வரை பழைய பிரச்னைகள் தலைதூக்கும்.
பரிகாரம்:
நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசித்து விட்டு வாருங்கள். சாலையோரம் வாழ் சிறார்களுக்கு உணவும், உடையும் கொடுங்கள்.
0 comments:
Post a Comment