பாட்டு ஒண்ணு பாடல் வரிகள்


Movie name: Pudhu Vasantham (1990) 
Music: S. A. Rajkumar 
Singer(s): S. P. Balasubrahmanyam, P. Susheela 
Lyrics:

பெண் : பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா
பால் நிலவை கேட்டு (இசை)

பெண் : பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா
பால் நிலவை கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்லை சேர்த்து

ஆண் : பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா
பால் நிலவை கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்லை சேர்த்து

***

ஆண் : இன்று வந்த புது வசந்தம் என்றும் தங்கும்
தென்றல் எங்கள் பாதைகளில் முல்லை தூவும்
குயில்களுக்கு தடைகள் போடும் 
மனிதன் இங்கே யாரு
குரல் கொடுத்தால் நிலவின் முதுகில் 
உரசும் நாளை பாரு
பயணங்கள் எங்கே என்று 
பாட்டில் கூற முடியாது
இசையென்னும் கடலில் ஆழம் 
எங்கே என்று தெரியாது
பாடுவதால் வாழுகிறோம் சோகமில்லையே

பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா
பால் நிலவை கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்லை சேர்த்து
பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா
பால் நிலவை கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்லை சேர்த்து

ஆண்குழு : ஓ..ஹோ..ஓ..ஹோ...ஓ....
ஓ..ஹோ..ஓ..ஹோ...ஓ....

***

ஆண் : ஏழை எங்கள் கூரை அது வானம் ஆகும்
இதயம் தானே எங்களது வாசல் ஆகும்
பாட்டுக்கென கூட்டில் சேர்ந்து 
பறவை போல வாழ்ந்தோம்
பசி எடுத்தால் பாட்டை உண்டு 
திசைகள் தேடி சேர்ந்தோம்
ஒரு தெய்வம் நேரில் வந்து 
உறவைசொல்லி துணையாச்சு
உலகங்கள் இது தான் என்று 
கவிதை தந்து உயிராச்சு
வானங்களை பாட்டெடுத்து வாகை சூடுவோம்

பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா
பால் நிலவை கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்லை சேர்த்து

{ஆண் : பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா
பால் நிலவை கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்லை சேர்த்து

ஆண்குழு : ஓ..ஹோ..ஓ..ஹோ...ஓ..
ஓ..ஹோ..ஓ..ஹோ...ஓ.... } (ஓவர்லாப்)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment