9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் மனதில் தெளிவு பிறக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள்.
மனதிற்கு இதமான செய்திகள் வரும். வாகனப் பழுது நீங்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார். ஆனால் எவ்வளவு பணம் வந்தாலும் கரையும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். முன்கோபம், ஒற்றை தலை வலி வந்து நீங்கும். அரசு காரியங்கள் தடைப்பட்டு முடியும்.
கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளே! வீண் பேச்சை தவிர்த்து தொகுதி நலனில் அக்கறை காட்டுங்கள். கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.
உத்தியோகத்தில் நீங்கள் திறமைசாலி என்பதை நிரூபிக்க தக்க வாய்ப்புகள் கிடைக்கும். தொல்லை தந்த மூத்த அதிகாரி இடம் மாறுவார். கலைத்துறையினர்களே! வேற்றுமொழி வாய்ப்புகளால் ஆதாயமடைவீர்கள். சிந்தித்து செயல்படுவதன் மூலம் சிரித்து மகிழும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 1, 3, 6, 18, 24
அதிர்ஷ்ட எண்கள் : 3, 9
அதிர்ஷ்ட நிறங்கள் : பிங்க், க்ரீம்வெள்ளை
அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், வியாழன்
0 comments:
Post a Comment