ஜூ‌ன் மாத ஜோதிடம் : 4, 13, 22, 31


4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டு.


குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். இரத்த சொந்தங்கள் வலிய வந்து உதவுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். லோன் கிடைக்கும்.

என்றாலும் சிறுசிறு விபத்து, அலைச்சல், மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடன் செலுத்துங்கள். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். அரசியல்வாதிகளே! கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். கன்னிப் பெண்களே! மனஉளைச்சல் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சில சலுகைகளை அறிவிப்பீர்கள். வேலையாட்களால் விரையம் வரும். உத்‌தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர்கள். கலைத்துறையினர்களே! போராடி படைப்புகளை வெளியிடுவீர்கள். விட்டுக் கொடுத்து வெற்றி பெறும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 4, 8, 13, 17, 22
அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 4
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிங்க், வைலெட்
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : வியாழன், சனி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment