ஜூ‌ன் மாத ஜோதிடம் : 2, 11, 20, 29


2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பணவரவு திருப்தி தரும். பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள். உறவினர்களுடன் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும்.


விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். அவ்வப்போது கை, கால் வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும். தந்தைக்கு மருத்துவச் செலவுகள், அவருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். மனைவிவழியில் ஆதாயமடைவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.

உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தூக்கமின்மை வந்து நீங்கும். அரசியல்வாதிகளே! தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் வேண்டாம்.

வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். உத்‌தியோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். கலைத்துறையினர்களே! பழைய நிறுவனங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் வரும். திட்டமிட்ட காரியங்களில் ஒருசில நிறைவேறும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 2, 6, 11, 15, 20
அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 9
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : வெள்ளி, செவ்வாய்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment