மா‌ர்‌ச் மாத ஜோதிடம் : 8, 17, 26


8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்கள், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வி.ஐ.பி.கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.


உங்கள் ரசனைக் கேற்ற சொத்து வாங்குவீர்கள். மகனின் கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். பழைய நண்பர்கள், உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பழைய வீட்டை புதுமைப்படுத்துவீர்கள். அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயம் உண்டு. தன்னம்பிக்கை பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வழக்கு சாதகமாக திரும்பும்.

வாகனம் புதிதாக அமையும். அவ்வப்போது மனஇறுக்கம், தூக்கமின்மை, தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து செல்லும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கோவில் விழாவை முன்னின்று நடத்துவீர்கள். மனோ பலம் அதிகரிக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அதிகாரப் பதவிகள் தேடி வரும்.

அரசியல்வாதிகளே! கட்சி மேலிடத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுப்பீர்கள். நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்‌தியோகத்தில் அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். கலைத்துறையினர்களே! உங்களின் சம்பளம் உயரும். மூத்த கலைஞர்கள் உதவுவார்கள். கடின உழைப்பால் இலக்கை எட்டும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 8, 12, 16, 17, 26, 29, 30
அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 9
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : சிவப்பு, கிளிப்பச்சை
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : புதன், சனி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment