6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். வருங்காலத்தை மனதில் கொண்டு முக்கிய திட்டங்களைத் திட்டுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். பிள்ளைகளின் போக்கில் அக்கறை செலுத்துவீர்கள்.
எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். வழக்கில் வெற்றி கிட்டும். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். சகோதரருக்கு வேலைக் கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அவ்வப்போது வேலைச்சுமை, முன்கோபம், இனந்தெரியாத கவலைகள், விமர்சனங்கள் வரும்.
சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவிக் கிடைக்கும். கடன் பிரச்னை ஒன்றை நினைத்து கவலைப்படுவீர்கள். அரசியல்வாதிகளே! தலைமையின் ஆலோசனையின்றி தன்னிச்சையாக செயல்படவேண்டாம். கன்னிப்பெண்களே! காதல் விவகாரங்களில் அவசரம் வேண்டாம்.
உயர்கல்வியில் அதிக கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அளவாகப் பழகுங்கள். கலைத்துறையினர்களே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். சகிப்புத் தன்மையால் முன்னேறும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 4, 5, 10, 12, 15, 21, 24
அதிர்ஷ்ட எண்கள் : 1, 8
அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ரோஸ்
அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, வியாழன்
0 comments:
Post a Comment